Ola Electric Scooter: S1 மற்றும் S1 Pro வகைகளின் விலையை வெளியிட்டது ஓலா நிறுவனம்
ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகத்தின் நேரடி நிகழ்வில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா மின்சார ஸ்கூட்டர் S1 மற்றும் S1 Pro ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.
OLA e-scooter Price: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இன்று தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. OLA இன் இ-ஸ்கூட்டருக்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த காத்திருப்பு இன்று நிறைவடைந்துள்ளது.
துவக்க நிலையில், நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ .99,999 ஆகும்.
ஓலா மின்சார ஸ்கூட்டர் (Ola Electric Scooter) அறிமுகத்தின் நேரடி நிகழ்வில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா மின்சார ஸ்கூட்டர் S1 மற்றும் S1 Pro ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், எஸ் 1 ஒரு புரட்சிகர தயாரிப்பு என்றும் அதன் விலையும் புரட்சிகரமானதாக இருக்கும் என்றும் கூறினார்.
ஓலா ஸ்கூட்டரின் விலை என்ன?
நிறுவனத்தின் படி, S1 வகையின் (S1 Variant) விலை ரூ .99,999 ஆகவும் S1 ப்ரோவின் விலை ரூ .1,29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
EMI வசதியுடனும் வாங்கலாம்
இது தவிர, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை (Electric Scooter) இஎம்ஐ -யில் வாங்க விரும்பினால், நிறுவனம் அதற்கான வசதியையும் உங்களுக்கு வழங்குகிறது. நிறுவனத்தின் வலைத்தளத்தில், அனைத்து வங்கிகளின் EMI பட்டியலையும் தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: Ola S1 Electric Scooter அறிமுகம் ஆனது: இனி இந்திய சாலைகளில் ஓலா உலா!!
இந்த வகையில் முன்பதிவு செய்யலாம்
நீங்கள் OLA இ-ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய விரும்பினால், நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து நேரடியாக முன்பதிவு செய்யலாம். ஓலா மின்சார ஸ்கூட்டரை 10 வண்ணங்களில் வாங்கலாம். இதில் கருப்பு, வெள்ளை, சாம்பல், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் அவற்றின் சாயல் நிறங்கள் அடங்கும்.
400 நகரங்களில் சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படும்
இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக, நிறுவனம் 400 நகரங்களில் 1,00,000 -க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைபார்சார்ஜிங் மையங்களை (Hypercharging Points) அமைக்கும். இதனால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சார்ஜ் செய்வதில் எந்த சிரமமும் இருக்காது. எந்தெந்த நகரத்தில் சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளன.
ALSO READ: Ola Scooter vs Simple One: ஆகஸ்ட் 15 அட்டகாசமான அறிமுகம், எந்த ஸ்கூட்டர் சிறந்தது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR