Ola S1 Electric Scooter Launch: மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் சற்று முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னர் அறிவித்திருந்தபடி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், நாட்டின் 75-வது சுதந்திர தினமான இன்று தனது ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
— Ola Electric (@OlaElectric) August 15, 2021
— Bhavish Aggarwal (@bhash) August 15, 2021
மின்சார ஸ்கூட்டரின் (Electric Scooter) அறிமுகம் குறித்து நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் ஒரு ட்வீட்டில் பதிவிட்டது. ஆகஸ்ட் 15 அன்று மதியம் 2 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வை நடத்தி அதில் ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளதாக ஓலா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தது.
அதன் படி தனித்துவமான பாணியில் இன்று ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து விட்டது. இதை olaelectrci.com என்ற நிறுவனத்தின் வலைத்தளத்திலும், நிறுவனத்தின் சமூக ஊடகத் தளங்களிலும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், நேரடியாக live streaming மூலம் கண்டு களித்தனர்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் செயலுத்தியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓலா மின்சார ஸ்கூட்டர் பல வித புதிய அம்சங்களுடன் வெளிவருகிறது:
- ஸ்கூட்டர்களில் வழக்கமாக இருக்கும் அனலாக் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டரின் இடத்தில் மிகப்பெரிய டச்ஸ்கிரீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் MoveOS மூலம் இயக்கப்படும்.
- ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரி முறையைப் பொறுத்து வெவ்வேறு ஒலிகள் எழுப்பப்படும்.
- ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவர்ஸ் கியருடன் வருகிறது. இதனால் பார்கிங் செய்வதில் பெரிய உதவி கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ஹில் ஹோல்ட் அசிஸ்டுடனும் (HSA) வரும். இது மேற்புறமான சாய்வில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் போது உதவியாக இருக்கும்.
- Ola Electric Scooter S1 10 வண்ணங்களில் வரும்.
- ஓலா மின்சார ஸ்கூட்டரில் (Ola Electric Scooter) சில அம்சங்களை மொபைல் செயலி மூலம் இயக்கலாம்.
- ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 ஸ்கூட்டரை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.
ALSO READ: Ola Electric Scooter: அட்டகாச புதிய அம்சத்துடன் கலக்கவுள்ளது ஓலா ஸ்கூட்டர், watch here!!
- 50 சதவிகிதம் சார்ஜ் செய்தாலே 75 கிலோ மீட்டர் வரை இதில் பயணிக்கலாம் என சொல்லப்படுகிறது.
- ஒரு முறை சார்ஜ் செய்தால், இது 150 கிமீ தூரத்திற்கு பயணிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
- இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவு பெரிய பூட் ஸ்பேசுடன் இந்த ஸ்கூட்டர் உள்ளது.
ALSO READ: Ola Scooter vs Simple One: ஆகஸ்ட் 15 அட்டகாசமான அறிமுகம், எந்த ஸ்கூட்டர் சிறந்தது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR