ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, Old Pension Scheme நன்மைகள் கிடைக்கும்: இதை செய்தால் போதும்
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமானால் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்தை தவறி விட்டால் அதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது. மத்திய பணியாளர் அமைச்சகம் (DPPW) இது தொடர்பாக அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்உதியம் வேண்டுமானால், அதற்கான தேர்வை செய்ய வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பால கலந்தாலோசித்த மத்திய அரசு, மத்திய ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு (OPS) மாறுவதற்கான விருப்பத்தைப் பெற வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய முறை (NPS) அமலுக்கு வந்த நாளான டிசம்பர் 22, 2003 -க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த ஊழியர்களுக்கு இது பொருந்தும். எனினும், இதற்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியாது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31 ஆகஸ்ட் 2023 ஆகும்.
நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது
மத்திய பணியாளர் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சஞ்சீவ் நாராயண் வெளியிட்டுள்ள கடிதத்தை அடுத்து, உத்தரபிரதேச பணியாளர் துறை அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. 2004 ஜனவரி முதல், நாட்டில் பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு தேசிய ஓய்வூதிய அமைப்பு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. என்பிஎஸ் -இன் கீழ், பணியாளரின் சம்பளத்தில் இருந்து 10% கழிக்கப்படுகிறது. பழைய ஓய்வூதியத்தில் ஜிபிஎஃப் வசதி உள்ளது, ஆனால் புதிய ஓய்வூதியத்தில் இதற்கான வசதி இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் படிக்க | அரசின் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? முழு விவரம்!
சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய பணியாளர்களும் இதற்கு தகுதி பெற மத்திய பணியாளர் அமைச்சகம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், உத்தரபிரதேசத்தின் பணியாளர் துறை, அதன் வரம்புக்குட்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 31, 2023 வரை பழைய ஓய்வூதிய முறைக்கான விடுப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், 2003 டிசம்பர் 22ம் தேதி வரை அரசு ஆட்சேர்ப்புக்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தின் கீழ், ஜனவரி 2004க்கு பிறகு பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தான் 2003 ஆம் ஆண்டு வரை விளம்பர அடிப்படையில் வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய பலன் வழங்க பரிசீலிக்கப்பட்டது. அதன் பிறகு அதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, பழைய ஓதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் இதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அதன் பின்னர் அதற்கான பலனை பெற முடியாது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்காத பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பலன்கள் கிடைக்கும். ஒரு ஊழியர் பழைய திட்டத்திற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்தால், அக்டோபர் 31, 2023 க்குள், அவரது என்பிஎஸ் கணக்கு மூடப்பட்டு பழைய ஓய்வூதிய முறை அவருக்கு மீண்டும் செய்லாக்கப்படும்.
மேலும் படிக்க | Pension Scheme: ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்! மத்திய அரசு திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ