Platform ticket hike: 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக கட்டணத்தை அதிகரித்தது ரயில்வே
முன்னதாக, மும்பை பெருநகர பிராந்தியத்தில் (MMR) தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை ரூ .50 ஆக இந்திய ரயில்வே உயர்த்தியது.
Platform ticket price today: மும்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையை ரூ .50 ஆக உயர்த்திய பின்னர், ரயில்வே தனது நெட்வொர்க் முழுவதும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ரூ .10 லிருந்து ரூ .30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வேயின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மும்பை பெருநகர பிராந்தியத்தில் (MMR) தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை ரூ .50 ஆக இந்திய ரயில்வே உயர்த்தியது. கொரோனா வைரஸை (Coronavirus) அடுத்து வரவிருக்கும் கோடைகாலத்தில் ரயில் நிலையங்களில் அதிக கூட்டம் வருவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.
முன்னதாக, செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யுடன் பேசிய மத்திய ரயில்வேயின் (Railway) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) சிவாஜி சுதார், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT), மும்பையில் உள்ள தாதர் மற்றும் லோகமான்ய திலக் டெர்மினஸ் (LTT) நிலையங்கள், அண்டை நகரான தானே, பன்வெல், கல்யாண் மற்றும் பிவாண்டி சாலை நிலையங்களிலும் முன்னர் இருந்த 10 ரூபாய்க்கு பதிலாக, இப்போது ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட் 50 ரூபாயாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
ALSO READ: அதிர்ச்சி! இப்போது இதன் விலையும் உயர்ந்தன, விலை உயர்வால் அவிதிபடும் நடுத்தர மக்கள்!
அதற்கு முன்னர் பிப்ரவரியில் ரயில்வே குறுகிய தூர பயணிகள் ரயில்களின் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தியது. கட்டணத்தில் ஏற்பட்டுள்ள குறைவான உயர்வு, தேவையற்ற பயணத்தை தவிர்ப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்துவதற்காகவே என்று ரயில்வே அப்போது டெரிவித்தது.
மேலும், உள்ளூர் கட்டணங்களும் 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டன. உதாரணமாக, நீங்கள் டெல்லியில் இருந்து காஜியாபாத் பயணம் செய்கிறீர்கள் என்றால், ரூ .10 க்கு பதிலாக ரூ .30 செலுத்த வேண்டியிருக்கும்.
அரசு பிளாட்ஃபார்ம் டிக்கெட் (Platform Ticket) கட்டணங்களை அதிகரிக்க பல காரணங்களை கூறுகிறது. கொரோனா தொற்று ஒரு பெரிய காரணமாக கூறப்படுகின்றது. கொரோனா காலத்தில் மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டும் என்பது இந்த விலை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மக்கள் தேவையற்ற பிரயாணங்களை தவிர்க்க வேண்டும் என்பது ஒரு காரணமாக கூறப்படுகின்றது. எனினும், தொடர்ந்து பல அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டது மக்களுக்கு சுமையாகவே இருக்கும். இந்த நடவடிக்கை நாட்டின் பிற மாநிலங்களிலும் தொடரலாம் என்றும் கூறப்படுகின்றது.
ALSO READ: இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR