புதுடில்லி: பயணிகள் ரயில் சேவைகள் ஏப்ரல் 1 முதல் மீண்டும், முழுமையான அளவில் தொடங்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, இந்திய ரயில்வே சனிக்கிழமை இது தொடர்பான ஒரு விளக்கத்தை வெளியிட்டது. மேலும் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு குறிப்பிட்ட தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறினார்.
ஒரு அறிக்கையில், ரயில்வே (Railway) ரயில் சேவைகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், ஏற்கனவே 65% க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் ரயில்வே கூறியுள்ளது. ஜனவரி மாதத்தில் 250 க்கும் மேற்பட்ட ரயில்களின் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், மேலும் வரும் நாட்களில் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் பரவாமல் தடுக்க நாடு தழுவிய அளவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்வே அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களை அளித்த ரயில்வே துறை, அனைத்து சூழ்நிலைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்கு முன் இது தொடர்பான அனைத்து துறைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியது.
நாட்டின் தொற்று நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுடனும் கலந்துரையாடிய பின்னர் முழு அளவிலான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ரயில்வே ஏற்கனவே கூறியுள்ளது.
தற்போது, ரயில்வே அனைத்து பேஸஞ்சர் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் 65% மட்டுமே இயங்குகிறது, ஒவ்வொரு மாதமும் ரயில்களின் எண்ணிக்கை 100-200 ஆக அதிகரிக்கப்படுகிறது.
முன்னதாக, சாதாரண ரயில் சேவைகள் குறைத்து சம்பந்தப்பட்ட மற்ற துறைகளுடனும் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ALSO READ | தற்சார்பு பாரதம்: கூகுள் மேப், கூகுள் எர்த் சேவைக்கு போட்டியாக ISRO-MapmyIndia
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR