Good News: நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இனி 24x7 எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தற்காலிக அறிக்கையின்படி, திங்கள்கிழமை காலை 7 மணி வரை, 3,12,188 அமர்வுகளில் 1.56 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Mar 3, 2021, 08:16 PM IST
  • மக்கள் இனி தங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
  • மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இதை இன்று தெரிவித்தார்.
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,989 பேருக்கு கொரோனா தொற்று.
Good News: நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இனி 24x7 எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

புதுடெல்லி: மக்கள் இப்போது தங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும், கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புதன்கிழமை (மார்ச் 3, 2021) அறிவித்தார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த செய்தியை அறிவித்த ஹர்ஷ் வர்தன் "தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிப்பதற்காக நேரக் கட்டுப்பாட்டை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நாட்டு மக்கள் இப்போது 24x7 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்." என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஹர்ஷ் வர்தன் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் குடிமக்களின் ஆரோக்கியத்தையும் அவர்களின் நேரத்தின் மதிப்பையும் புரிந்துகொள்கிறார் என்றார்.

முன்னதாக செவ்வாயன்று, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோருடனான உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்ச் 1 முதல் தொடங்கிய நாடு தழுவிய COVID தடுப்பூசி செயல்திட்டத்தின் அடுத்த கட்டத்தின் நிலை மற்றும் வேகத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.

கோவிட் தடுப்பூசி மையங்களாக (CVC) செயல்படும் அனைத்து தனியார் மருத்துவமனைகளின் திறன்களையும் 100 சதவீதம் பயன்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தப்பட்டனர். அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ள முழு காலத்திற்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் (அரசு மற்றும் தனியார்) கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை போதுமான அளவு ஒதுக்கீடு செய்வதை உறுதிசெய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் மூலம் அவை சி.வி.சி-களாக தடையில்லாமல் செயல்பட முடியும்.

COVID தடுப்பூசிகளுக்கு (COVID Vaccine) பற்றாக்குறை இல்லை என்றும், ஆகையால், சி.வி.சி-களுக்கு போதுமான தடுப்பூசி அளவு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ALSO READ: இனி Corona vaccine ஐ இந்த App இல் பதிவு செய்யலாம், இங்கே முழுமையான விவரம்!

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும் COVID-19 தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி செயல்முறை துவங்கியது. முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கு வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது. முன்னணி பணியாளர்களுக்கான கட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கியது.

முதல் டோஸ் போடப்பட்டு 28 நாட்களானவர்களுக்காக, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் ப்ரவரி 13 அன்று தொடங்கின.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தற்காலிக அறிக்கையின்படி, திங்கள்கிழமை காலை 7 மணி வரை, 3,12,188 அமர்வுகளில் 1.56 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,989 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையை 1,70,126 ஆக உயர்த்தியுள்ளது.

ALSO READ: COVID-19 Vaccine போடுவதற்கு உலகிலேயே இந்தியப் பெண்கள் அதிக விருப்பம் காட்டுவது ஏன்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News