போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதை மக்கள் பலரும் பாதுகாப்பானதாக கருதுகின்றனர், மேலும் இதில் முதலீடு செய்வது லாபகரமானதாகவும் இருக்கிறது.  மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடு உங்களுக்கு பலனை தந்தாலும் அது பாதுகாப்பானதல்ல, ஆனால் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.  அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த நிறுவனமானது மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்த சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களின் எதிர்கால நிதி சிக்கல்களை சமாளித்துக்கொள்ள முடியும், இதன் சிறப்பான சேமிப்பு திட்டங்களில் ஒன்று ரெக்கரிங் டெபாசிட், இதில் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு நல்ல லாபம் கிடைக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போஸ்ட் ஆபீஸின் ஆர்டி திட்டத்தில் நீங்கள் குறைந்தப்பட்சமாக வெறும் ரூ.100 முதலீடு செய்யலாம் மற்றும் இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.  இந்த திட்டத்தில் நீங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முதலீடு செய்துகொள்ள முடியும்.  இதில் ஒவ்வொரு காலாண்டிலும் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி கிடைக்கும், ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும், வட்டித் தொகையும் கூட்டு வட்டியும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.  தற்போது இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் நீண்ட காலம் முதலீடு செய்தால் திட்டத்தின் முதிர்வில் லட்சக்கணக்கணக்கில் பணத்தை பெறலாம்.



மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்! 


இந்த திட்டத்தில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.16 லட்சம் கிடைக்கும்.  அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 டெபாசிட் செய்யும்போது அது ஒரு வருடத்தில் ரூ.1,20,000 ஆக வரும், இதில் நீங்கள் 10 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.  அந்த 10 ஆண்டுகள் முடிவில் ரூ.12,00,000 ஆக உங்கள் முதலீடு இருக்கும், பின்னர் திட்டம் முதிர்வடைந்த பிறகு ரூ.4,26,476 கிடைக்கும். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.16,26,476 கிடைக்கும்.  இந்த திட்டத்தில் 12 தவணைகள் நீங்கள் கட்டும் பட்சத்தில் மொத்த தொகையில் 50% கடனாக பெறலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவது எப்படி? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ