7th Pay Commission: ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவது எப்படி?

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான டிஆர் தொகையானது அதற்கு முன்னர் உள்ள ஆண்டுகளின் டிசம்பர் மாதத்திற்கான டிஆர் விகிதங்களின்படி கணக்கிடப்படுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Sep 6, 2022, 06:23 AM IST
  • மத்திய அரசின் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் டிஏ/டிஆர் உயர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
  • அதிகாரபூர்வ போரட்டலில் ஓய்வூதியம் பெறுவோரின் டிஆரை கணக்கிட்டு கொள்ள வழிவகை செய்திருக்கிறது.
  • டிஆர் தொகை 34% ஆக இருக்கும்போது ஓய்வூதியதாரர்களுக்கு மொத்த ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ரூ. 67,000 ஆக கிடைக்கும்.
7th Pay Commission: ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவது எப்படி? title=

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தருவது போலவே அதன் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணம் (டிஆர்) வழங்குகிறது.  டிஏ மற்றும் டிஆர் விகிதங்கள் முறையே ஆண்டுக்கு இரண்டு முறை என்கிற வீதத்தில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறிவிக்கப்படும்.  வெகு நாட்களாகவே மத்திய அரசின் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் அவர்களின் டிஏ/டிஆர் உயர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் இப்போது அதன் அதிகாரபூர்வ போரட்டலில் ஓய்வூதியம் பெறுவோரின் டிஆரை கணக்கிட்டு கொள்ள வழிவகை செய்திருக்கிறது. 

அந்த கால்குலேட்டரின்படி, டிஆரில் மாற்றம் செய்வதற்கு முன்னர் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ரூ. 50,000 எனும்போது, உங்கள் டிஆர் தொகை 34% ஆக இருக்கும்போது ஓய்வூதியதாரர்களுக்கு மொத்த ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ரூ. 67,000 ஆக கிடைக்கும்.  அதுவே ஓய்வூதியத் தொகை ரூ.20,000 ஆக இருந்தால், டிஆர் தொகை ரூ.17,000 ஆக உயர்ந்து மொத்த ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.47,000 ஆக கிடைக்கும்.  டிஆர் கால்குலேட்டரை https://pensionersportal.gov.in/PensionCalculators/Calculator_DR/Calcula...ல் பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க | தொலைந்த போன ரேஷன் கார்டு திரும்ப பெறுவது எப்படி

ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலின்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான டிஆர் தொகையானது அதற்கு முன்னர் உள்ள ஆண்டுகளின் டிசம்பர் மாதத்திற்கான டிஆர் விகிதங்களின்படி கணக்கிடப்படுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிஆர் ஜூன் மாத டிஆர் விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.  ஓய்வூதியதாரகளின் போரட்டலில் ஜனவரி-பிப்ரவரி மற்றும் ஜூலை-ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்கான டிஆர் நிலுவை தொகையானது வழக்கமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Digital Loan பற்றி ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News