விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?
Thumb Sucking Habits In Kids : சில குழந்தைகள் தங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு தூங்குவர். இதை எப்படி கட்டுப்படுத்துவது?
Thumb Sucking Habits In Kids : குழந்தைகள், வாயில் விரல் வைத்துக்கொண்டு தூங்குவது மிகவும் சகஜமான நடவடிக்கையாகும். ஆனால் இதுவே ஒரு பழக்கமாக மாறினால் அது அவர்களை வளர்ந்த பின்பும் பாதிக்கலாம்.
குழந்தைகள் ஏன் வாயில் கை வைக்கின்றன?
பெரும்பாலான குழந்தைகள், தாய்ப்பாலை நேரடியாக தாயிடம் இருந்தோ அல்லது பாட்டிலிலோ குடித்து பழகுகின்றன. இதனால் அவைகளுக்கு இயற்கையாகவே எதையேனும் உறிஞ்சும் பழக்கம் இருக்கும். சாப்பிடும் நேரம் தவிர, பிற நேரங்களிலும் தன் வாயில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்று அவைகளுக்கு தோன்றும். இதனால் தான் திருபாலான குழந்தைகள் தங்கள் கட்டை விரல் அல்லது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள்கின்றன.
குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தாயின் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே ஆரம்பிக்கிறது எனக் கூறுகிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி. இதுபோன்று வாயில் கையை வைத்துக் கொள்வது குழந்தைகளுக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிப்பதாகவும் இதனால் தான் அவை தூங்கும் போது கூட வாயில் கை வைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
எத்தனை நாட்கள் இந்த பழக்கம் தொடரும்?
பெரும்பாலான குழந்தைகள் 6 முதல் 7 மாதங்கள் வரை வாயில் விரல் வைத்து தூங்குவர். ஒரு சில குழந்தைகள் இரண்டு முதல் நான்கு வயது வரை இந்த பழக்கத்தை தொடர்வர். ஆனால் இப்படி கை கட்ட விரலை வாயில் வைக்கும் பழக்கத்தை நிறுத்திய குழந்தைகளும் கூட சில சமயங்களில் இதை செய்வர். பதற்றம் அல்லது சோகமான உணர்வு ஏற்படும் நேரங்களில் அவர்கள் இதை செய்யலாம்.
பெற்றோர்கள் தடுக்கலாமா?
குழந்தைகளுக்கு பற்கள் வளரும் வரை வாயில் கை வைக்கும் பழக்கம் என்பது சிறிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் பற்கள் வளர ஆரம்பிக்கும் போது வாயில் கை வைப்பதால் ஈறுகளில் பிரச்சனை, பல் வளர்ச்சியில் மாற்றங்கள் ஆகியவை ஏற்படலாம். ஒரு சில மருத்துவர்கள் குழந்தைகள் கை உறிஞ்சும் பழக்கத்தை மூன்று வயதிற்கு முன்பே தடுக்க வேண்டும் என்று கூற, இன்னும் சிலர் ஐந்து வயது வரை இதை தடுக்க நேரம் இருப்பதாக கூறுகின்றனர்.
இதை எப்படி தடுப்பது?
> குழந்தைகள் விரல் உறிஞ்சும் பழக்கத்தை நிறுத்த, அவர்களுக்கு பாசிட்டிவான எண்ணங்களை மற்றும் வார்த்தைகளை நாம் அளிக்க வேண்டும். அவர் இன்று நாள் முழுவதும் விரல் உறிஞ்ச வில்லை என்றால் அவருக்கு பிடித்த விஷயங்களை செய்து தருவேன் என வாக்குறுதி கொடுக்கலாம். எத்தனை நாட்கள் இதுபோல விரல் உரிஞ்சாமல் இருக்கிறார் என்று அவரை ஒரு சிறிய காலங்களில் டிராக் செய்ய சொல்லலாம்.
>காரணத்தை கண்டறிதல்: குழந்தை எந்தெந்த சமயங்களில் இது போன்ற விரல் உறிஞ்சும் பழக்கத்தை வைத்திருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இதற்குப் பின்னால் மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அந்த சமயங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிப்பது பெற்றோரின் கடமையாகும்.
>நினைவூட்டுதல்: பல குழந்தைகள் தங்களை அறியாமலேயே சமயங்களில், விரலை வாயில் வைத்துக் கொள்வர். அப்போது, அவர்களை திட்டாமல், கடிந்து பேசாமல், மென்மையாக வாயிலிருந்து கையை எடுக்குமாறு நினைவூட்ட வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ