Parenting Tips to Make Discipline Children : குழந்தைகள் பலர், தங்களை விட வயதில் பெரியவர்களிடம் பல சமயங்களில் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வர். அப்படி நடந்து கொள்ளும் குழந்தைகளை திருத்துவது எப்படி?
Parenting Tips to Make Discipline Children : குழந்தையும் தெய்வமும் ஒன்று என, பலர் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அப்படி தெய்வத்திற்கு நிகராக பார்க்கப்படும் குழந்தைகள் பல சமயங்களில் பெரியவர்களுக்கு மிகுந்த கோபம் அளிக்கும் வகையில் நடந்து கொள்வதுண்டு. குழந்தைகள்தானே, என்று பலர் மன்னித்து விடுவதுண்டு. ஆனால், அப்படி மன்னித்து விட்டாலும் ஒரு சில குழந்தைகள் வளரும் போது, அதே மரியாதை அற்ற குணத்துடன் வளருவர். இவர்களை பெற்றோர் திருத்துவது எப்படி? இதோ டிப்ஸ்!
குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அதில் சில, பெரியவர்களுக்கு பிடித்தவையாக இருக்கலாம். சில, பெரியவர்களுக்கு பிடிக்காதவையாக இருக்கலாம். ஒரு சில குழந்தைகள் பெரியவர்களை மரியாதை அற்ற வகையில் நடத்துவர். அப்படி செய்யும் குழந்தைகளை எப்படி திருத்துவது?
குழந்தைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என முதலில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நடைப்பெற்ற ஒரு விஷயத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அப்படி நடந்து கொண்டிருக்கலாம். காரணம் தெரிந்த பின்பு, இதற்கு நீங்கள் ரியாக்ட் செய்யலாம்.
உங்கள் குழந்தை யாரிடம் ஏனும் மரியாதை குறைவாக நடந்து கொண்டால் அது ஒத்துக்கொள்ள முடியாத செயல் என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை எனில், அது தவறு என்பதே அவர்களுக்கு தெரியாது.
உங்கள் குழந்தை யாரிடம் ஏனும் மரியாதை குறைவாக நடந்து கொண்டால், அதற்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். இதனால் அவர்கள், அவர்களை பற்றியே நன்றாக புரிந்து கொள்வர்.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்லொழுக்கங்களை சொல்லிக்கொடுக்கும் போது, அதை அவர்கள் சரியாக கற்றுக்கொள்கிறார்களா என்பதையும் அதை பின்பற்றுகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அப்படி, அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அதனை பாராட்டவும் செய்யலாம்.
நீங்கள் உங்கள் குழந்தைக்கு பெற்றோர் என்பதற்காக அவர்களுக்கு அதிகாரி போல நடந்து கொள்ள வேண்டாம். எனவே, அவர்களுக்கு நீங்கள் முதலில் நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள். அப்போதுதான் அவர்களும் நல்ல மனிதர்களாக வளருவர்.
உங்கள் குழந்தை உங்களை பார்த்து வளருவர் என்பதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். எனவே, அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுப்பது நீங்கள் ஒழுக்கமாக இருக்கும் போதில் இருந்து ஆரம்பிக்கிறது.