புதுடெல்லி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் யோனோ 2.0 ஐ செயலி விரைவில் அறிமுகமாகிறது. பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் யோனோ 2.0 செயலியை பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கூகுள் பே முறையில் YONO 2.0ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன. YONO 2.0 சேவையை பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 


அனைத்து இந்தியர்களும் YONO 2.0 இன் சேவையைப் பெற முடியும். டிஜிட்டல் வங்கி சேவைகளுக்காக 2019ம் ஆண்டு  மார்ச் 16ம் நாளன்று, பாரத ஸ்டேட் வங்கியின் YONO செயலி  அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த செயலியில் டிஜிட்டல் பேங்கிங் உள்ளிட்ட இ-காமர்ஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன. 


மேலும் படிக்க | மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!


யோனோ கேஷ் என்பது யோனோ செயலியில் கிடைக்கும் தனித்துவமான அம்சமாகும். எஸ்பிஐ ஏடிஎம்கள் மற்றும் பெரும்பாலான எஸ்பிஐகளின் வணிக பிஓஎஸ் டெர்மினல்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை புள்ளிகள் (SBIs Merchant POS terminals or Customer Service Points) இந்தியாவில் உள்ள எந்தவொரு கார்டையும் பயன்படுத்தாமல் அல்லது பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பாமல் உடனடியாக பணத்தை எடுக்க யோனோ செயலி உதவுகிறது.


YONO பயனர்கள், செயலியின் இயங்குதளத்தில் உள்நுழைந்து, குறிப்பு எண்ணை உருவாக்க மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான டைனமிக் பின்னை உருவாக்க YONO Cash அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். 


இந்த வசதியை, தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவின் வாடிக்கையாளர்களைத் தவிர பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம்.


ஆன்லைன் பேங்கிங் மொபைல் செயலியான யோனோவின் சேவையை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாக பெற்று வருகிறார்கள். தற்போது இந்த சேவையை அனைவரும் பெறலாம் என்பது வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும்.


மேலும் படிக்க | YONO SBI App செயலி


யோனோ மூலமாகக் கடனுக்கு விண்ணப்பிப்பது எளிதானது என்பதுடன் செயல்பாட்டுக் கட்டணமில்லா சேவை உட்பட பல்வேறு சலுகைகளை யோனோ வழங்கிவருகிறது. 


யோனோ 2.0 செயலியில் வேறுபல சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. யோனோ 2.0 என மேம்படுத்தப்பட்ட பிறகு, இந்த செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பயன்பாட்டைப் பொறுத்தவரையில், 2021ஆம் ஆண்டில் மட்டும் மாதாந்திர பயனாளர்களின் எண்ணிக்கையில் 35 சதவீத வளர்ச்சி பதிவானது குறிப்பிடத்தக்கது. யோனோ செயலியில் மாதத்துக்கு சுமார் 54 மில்லியன் பயனாளர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.


ஏடிஎம், பிஓஎஸ் டெர்மினல் அல்லது சிஎஸ்பி போன்ற எந்த சேனல்களிலிருந்தும் பரிவர்த்தனையை முடிக்கவும், பணத்தை எடுக்கவும்/பெறவும் வாடிக்கையாளர் அதைப் பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | SBI Yono முக்கிய விதி: லாக்-இன் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR