SEBI: IPO இல் முதலீடு செய்கிறீர்களா, அப்போ இந்த செய்தி உங்களுக்குத் தான்
ஐபிஓக்களில் முதலீடு செய்யும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.
ஐபிஓவில் முதலீடு செய்யும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. செபி இது தொடர்பான விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது, இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மே 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது
செபியின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி பிசினஸ் டுடே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின்படி, ஐபிஓவுக்கு ஏலம் எடுக்கும் அனைத்து சில்லறை முதலீட்டாளர்களும் ரூ.5 லட்சம் வரை ஏலம் எடுக்க யுபிஐ பேமெண்ட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் யுபிஐ ஐடியை தங்கள் விண்ணப்பப் படிவத்தில் (Bid-cum-Application) வழங்கலாம். இந்த விதி மே 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்
என்.பி.சி.ஐ அமைப்பை தயார் செய்துள்ளது
இந்த புதிய அமைப்பிற்கான தனது அமைப்பை தயாரிப்பதை என்.பி.சி.ஐ மதிப்பாய்வு செய்துள்ளது என்று இந்த சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனுடன், சுமார் 80% இடைநிலை நிறுவனங்களும் புதிய விதிகளின்படி மாற்றங்களைச் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில் செபி இன் இந்த முடிவு, யுபிஐ கட்டண பரிவர்த்தனைகளுக்கான விதிகளை என்.பி.சி.ஐ மாற்றிய 4 மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளது. அந்த முடிவில், என்.பி.சி.ஐ ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பை யுபிஐ இலிருந்து 2 லட்சமாக குறைத்துள்ளது. அதே நேரத்தில், 2018 ஆம் ஆண்டிலேயே ஐபிஓவில் முதலீடு செய்ய யுபிஐ மூலம் பணம் செலுத்த செபி அனுமதி வழங்கியது, இது ஜூலை 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செபி என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மேலும் படிக்க | LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி: நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR