2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்து அனைத்து ராசிகளையும் பாதித்தன. ஆனால் ஜோதிடத்தின் பார்வையில் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாதத்தில் ஒரே ராசியில், அதுவும் சனி பகவானின் (Lord Shani) ராசியான மகர ராசியில் 5 கிரகங்கள் கூடுகின்றன. மகர ராசியில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் மற்றும் சனி ஆகியவை ஒரே நேரத்தில் இருப்பது ஒரு பெரிய நிகழ்வை உருவாக்குகிறது. இது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ALSO READ | சனியின் வக்ர நகர்வு: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வரலாம் 


இந்த ராசிக்காரர்களுக்கு பஞ்சகிரஹி யோகம் பலன் தரும்


தற்போது மகர ராசியில் சனி, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. மறுபுறம், செவ்வாய் மற்றும் புதன் மகர ராசியில் நுழைந்து பஞ்சகிரஹி யோகத்தை உருவாக்கும். இந்த பஞ்சகிரஹி யோகம் அனைத்து 12 ராசிகளையும் (Zodiac Signs) பாதிக்கும். 


எனினும் இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சாதகமாக அமையும். இந்த பஞ்சகிரஹி யோகம் மேஷம், ரிஷபம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்குப் பண பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். 


இந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள்


மகர ராசியில் (Capricorn) உருவாகும் பஞ்சகிரஹி யோகம் 3 ராசிக்காரர்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். இந்த யோகம் தனுசு, கும்பம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும். 


இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். உடல்நலப் பிரச்சினைகளும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படலாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் கவனமாக இருப்பது நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


Also READ | முக்கிரக சேர்க்கையால் பலனடையும் 3 ராசிகள்! நீங்கள் எந்த ராசிக்காரர்? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR