சுகர் லெவல் அதிகமா இருக்கா..? ‘இந்த’ 5 உணவுகளை எடுத்துக்கோங்க..!
How to Control Sugar Level: உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, சில உணவுகளை எடுத்துக்கொண்டால் போதும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். பலர், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பலர் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களின் இன்சுலில் அளவு குறைந்தாலும், அது சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வாக இருக்காது. ஆனால், நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் சில மாறுதல்களை செய்தாலே போதும், உடலில் உள்ள சர்க்கரை அளவை கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள உதவும்.
1.பாகற்காய்:
இந்த காயின் பெயரை கேட்டவுடனே சிலருக்கு கசப்பு தோன்றுவது போன்று தோன்றும். ஆனால், இருக்கும் காய்கறிளேயே இதுதான் மிகவும் ஹெல்தியான காய்கறியாக உள்லது. உடலில் உள்ள க்ளுகோஸ் அளவை அதிகரிக்கவும் இந்த காய் உதவும். உடலில் உள்ள சர்க்கரை அளவை எளிய இயற்கையான முறையில் குறைக்க, பாகற்காயை எடுத்துக்கொள்ளலாம். இதை தினசரி எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்லாம்.
மேலும் படிக்க | தொப்புளில் எண்ணெய் வைத்தால் ‘இந்த’ பிரச்சனைகள் நீங்கும்..! ட்ரை பண்ணி பாருங்க..!
2.வெண்டைக்காய்:
ஆங்கிலத்தில் Okra எனும் பெயரில் அழைக்கப்படும் காய், வெண்டைக்காய். இதில், ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடலில் ஏறும் சர்க்கரை அளவினை மெதுவாக்கவும் இந்த காய் உதவும். மேலும், உணவை செரிமானம் செய்வதற்கும் வெண்டைக்காய் உதவும். இது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். திடீரென அதிகரிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் வெண்டைக்காய் உதவும்.
3.ப்ரக்கோலி:
ப்ரக்கோலியில், கொழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இதில், ஹை ஃபைபர் புரத சத்துக்களும் நிறைந்துள்ளது. வைட்டமின் சத்துக்களும், மினரல் சத்துக்களும் ப்ரக்கோலியில் நிறைந்துள்ளது. இது, நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் காய்கறிகளுள் ஒன்று, ப்ரக்கோலி. உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் ப்ரக்கோலி உதவும்.
4.கீரை:
கீரையை ஆங்கிலத்தில் Spinach என்று அழைப்பர். இது, ரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவை சரியாக சம நிலை படுத்த உதவும். வைட்டமின் சி சத்துக்களும், அயர்ன் சத்துக்களும், பொட்டாசியம் சத்துக்களும் கீரை வகை காய்கறிகளில் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், கிரையை பயன்படுத்தலாம்.
5.பரட்டைக்கீரை:
பரட்டைக்கீரை உடலில் உள்ள கலோரி அளவை குறைக்க உதவும் காய்களுள் ஒன்று இது. இந்த காய்கறியில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை என கூறலாம். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிரமப்படுவோர், இந்த காய்கறியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கீரையை, 50 கிராம் அளவு எடுத்துக்கொண்டால், உடலில் நார்சத்தை அதிகரிக்கலாம். இதனால், குடல் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும். இதில், வைட்டமின் பி 12 சத்துகள் மற்றும் மெக்னீசியம் சத்துக்களும் நிறைவாக உள்ளன.
மேலும் படிக்க | அசிங்கமான மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ