அந்த காலம் முதல், இந்த நவீன யுகம் வரை நம் வீட்டில் பெரியவர்கள் கடைப்பிடிக்கும் வீட்டு வைத்தியங்களுள் ஒன்று, தொப்புளில் எண்னெய் வைப்பது. உறங்குவதற்கு முன்னர் வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவி கொண்டு தூங்குவது சில வீடுகளில் இன்றும் ஒரு வழக்கமாக கடைப்பிடிக்கபட்டு வருகிறது. முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த இந்த பழக்கம் உண்மையாகவே உடலுக்கு பல நன்மைகளை தரும் பழக்கமாக பார்க்கப்படுகிறது. இதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் பல நிரூபித்துள்ளன.
தொப்புளில் எந்த எண்ணெயை தடவ வேண்டும்..?
தொப்புளில் தடவ எந்த எண்ணெயை வேண்டுமானாலும் நாம் உபயோகித்து கொள்ளலாம். ஆனால், பெரும்பாலானோர் பயன்படுத்துவது, விளக்கெண்ணையைதான். இந்த எண்ணெயைதான் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை போக்குவதாக நம்பப்படுகிறது. இந்த எண்ணெய் மட்டுமன்றி, தேங்காய் எண்ணெய், நெய், ஆமணக்கு எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை கொண்டும் தொப்புளில் மசாஜ் செய்யலாம். இப்படி உறங்குவதற்கு முன்னர் தொப்புளில் எண்ணெயை வைத்து மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
தாெப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் பயன் என்ன?
தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பு, இவ்வாறு எண்ணெய் தடவி தொப்புளில் மசாஜ் செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். அது மட்டுமன்றி, நம் ஒட்டுமொத்த உடலில் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொப்புளில் எண்ணெயை வைத்து மசாஜ் செய்வதால் உடலின் நரம்பு மண்டலங்களும் சரியாக செயல்படுகின்றன. நரம்பு மண்டலங்களில் உள்ள பாதிப்புகளும் இதனால் சரி செய்யப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நமது நாபி (தொப்புள்) Pechotoid gland (பெச்சொட்டி சுரப்பி) எனும் இடத்தில்தான் உடலின் மொத்த அசைவுகளும், அனுக்களும் ஒன்றினைவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த எந்த சான்றுகளும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் படிக்க | Health News: தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்தால் என்ன நன்மை தெரியுமா?
எப்படி மசாஜ் செய்தால் என்ன பயன்?
தினமும் இரவு, உறங்க செல்வதற்கு முன்பு மூன்றிலிருந்து ஏழு சொட்டுகள் வரை நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை தொப்புள் பகுதியில் ஊற்ற வேண்டும். பின்னர், இதைக்கொண்டு அரை அங்குலம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தினமும் இரவு மசாஜ் செய்வதால், கண்களில் உள்ள வறட்சி நீங்கி, கண்பார்வை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதே போல தூங்குவதற்கு முன்னர், மூன்றிலிருந்து ஏழு சொட்டுகள் வரை கடுகு எண்ணெயை தொப்புளில் தடவி வயிற்றுப்பகுதி முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும், இதனால், நம் மூட்டுகளில் ஏற்படும் வலி நீங்கும் என கூறப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெயை உடலில் மூன்று முதல் ஏழு சொட்டுகள் வரை தொப்புளில் ஊற்றி அரை அங்குலம் வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால், மூட்டு வலி, முழங்கால்களில் ஏற்படும் வலி, கை-கால் வலி போன்றவை நீங்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு ஆமணக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் உடலில் உள்ல எலும்புகள் அனைத்தும் வலு பெறும் என்பதும் சில நாட்டு மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
வேப்பெண்ணையை கொண்டு தொப்புளில் மசாஜ் செய்வதாலும் பல மேஜிக் நடக்கிறது. முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்க, மூன்றிலிருட்னு நான்கு சொட்டு வேபெண்ணையை தூங்க செல்வதற்கு முன்னர் தொப்புளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதை செய்ய ஆர்மபித்த சில வாரங்களிலேயே நல்ல ரிசல்ட் தெரியும் என உபயோகித்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்! இது பாதாம் எண்ணெய் மசாஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ