Avoid Seepage: சுவர்களில் ஈரப்பதமா இல்லை நீர்க்கசிவா: பாதுகாக்க வழிகள்
வீடு என்பது நிம்மதியைத் தரும் இடம். பெருமைக்குரியதாகவும் போற்றப்படும் வீட்டில் நீர்க்கசிவு, ஈரப்பதம் இருந்தால் அதை உடனடியாக சரி செய்யவும்
நீர்க்கசிவினால், வீட்டிலும், கட்டடங்களின் சுவர்களிலும் ஈரப்பதம் வந்து சேதங்களை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, சுவற்றின் ஈரப்பதம் தொடரும்போது பூஞ்சைகள் வீட்டிற்கும் வருகின்றன. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் இருப்பதால், வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் பாதித்து, பல்வேறு வகையான நோய்கள் பரவுகின்றன.
அதோடு, நீண்ட நாட்களாக ஈரப்பதம் சுவர்களில் இருந்தால், கட்டடம் அல்லது உங்கள் வீடு பலவீனமாகிவிடும். ஈரப்பதம் வருவதற்கு முன், அதை அடையாளம் கண்டு சரி செய்துவிட்டால் பிரச்சனை இருக்காது.
வீட்டில் ஈரப்பதம் மற்றும் சுவரின் நீர்க்கசிவை தவிர்க்க கீழ்கண்ட உதவிக் குறிப்புகள் பயனுள்ளவையாக இருக்கும்.
மேலும் படிக்க | நீல வானம் பசுமையாக மாறிய அதிசயம்
வடிகால் குழாயை சரிபார்க்கவும்
வீட்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட நீரை வெளியேற்றுவதற்காகவும், மழை நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட வடிகால் குழாய்கள், சுவர்களில் ஈரக்கசிவு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.
வடிகால் குழாய்களில் குப்பை தேங்குவதால் தண்ணீர் சரியாக வெளியேற முடியாமல், தேங்கி சிறிது சிறிதாக வெளியேறும்போது அந்த இடங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. எனவே, அவ்வப்போது வடிகால் குழாயை சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும், இதனால் வீட்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட நீர் உடனடியாக வெளியேறும், நீர்க்கசிவோ, ஈரப்பதமோ ஏற்படாது.
மொட்டை மாடியில் அல்லது மேல் தளத்தில் உள்ள விரிசல்களை சரிசெய்யவும்
வீட்டின் மேற்கூரையில் கசிவு ஏற்படுவதும் ஈரப்பதத்திற்கு முக்கிய காரணம். எனவே, மேல் தளம் அல்லது மொட்டை மாடி மற்றும் சுவர்களின் மூலைகளை நன்கு சரிபார்க்கவும்.
டிஷ் ஆண்டெனா அல்லது வேறு ஏதேனும் ஒன்றை நிறுவும் போது, ஏதேனும் விரிசல் அல்லது இடைவெளி இருந்தால், அதை நீர்ப்புகா கலவையால் நிரப்பவும். இந்த சிறிய வேலையும் நீர்க்கசிவைத் தடுக்கும். இல்லாவிட்டால் மழை வந்தால் வீடு சேதமாகும்.
மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா
ஜன்னல்கள்
பெரும்பாலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் இணைப்பு வழியாக வீட்டிற்குள் தண்ணீர் வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதை சரிபார்க்கவும், அதனால் தண்ணீர் உள்ளே வராது. உங்கள் வீட்டில் ஸ்பிலிட் ஏசி பொருத்தப்பட்டிருந்தால், சுவரில் இருந்து வரும் குழாய் இருக்கும் இடத்தைச் சரிபார்க்கவும். அது திறந்திருந்தால், அதை உரிய முறையில் மூடவும்.
சுவரில் தாவரங்கள் முளைத்தால் அகற்றவும்
சுவர்களில் அல்லது மேற்கூரையில் சிறிய விரிசல் விட்டிருந்தாலும், அந்த இடத்தில் செடிகள் வளரத் தொடங்கிவிடும். செடிகள் வளரத் தொடங்கினால், விரிசல் அதிகரித்துக் கொண்டே போகும்.
அதன் வழியாக நீர் உள்ளே புகுந்து வீட்டின் உறுதியைக் கெடுக்கும்.
சிலர் வீட்டின் மொட்டைமாடி மற்றும் பால்கனிகளில் செடி வளர்ப்பார்கள். அப்படி இருந்தால், தண்ணீர் கசிகிறதா என்பதை அவ்வப்போது சரிபார்க்கவும்.
மின் கம்பிகளை சரிபார்க்கவும்
உங்கள் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவரில் மின் கம்பிகள் இருந்தால், அவற்றையும் சரிபார்க்கவும். ஏனெனில் மின்சார கம்பி சேதமடைந்திருந்தால், மழை வந்தால், அந்த கம்பிகள் மூலம் சுவரில் இருக்கும் ஈரப்பதம் மூலம் வீட்டில் மின்சாரம் பாயலாம்.
மேலும் படிக்க | கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா: இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR