தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?
நம்மில் பலர், அலுவலகத்தில் பல மணி நேரங்கள் ஏசியிலேயே அமர்ந்து கொள்கிறோம். இதனால், என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தெருவுக்கு 10 அல்லது 15 வீடுகளில்தான் ஏசி என்ற ஒன்று இருக்கும். ஆனால் இப்போது அப்படியல்ல, ஒரு வீட்டில் இரண்டு அறைகள் இருந்தால், அந்த இரண்டு அறைகளிலுமே ஏசி இருக்கிறது. அலுவலக வேலைக்கு செல்பவர்களும், தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் முழு நேரமும் ஏசியில்தான் இருக்கின்றனர்.
கோடை காலங்களில், வெளியில் வெயில் கொளுத்தும் நேரங்களில் ஏசிதான் பலருக்கு கவசகுண்டலமாக இருக்கிறது. ஆனால் இப்படி, பல மணி நேரங்கள் ஏசியில் அமர்வதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
அதிக நேரம் ஏசியில் உட்காருவதால் ஏற்படும் பாதிப்புகள்:
நீர்ச்சத்து குறைபாடு:
ஏசியை அதிக நேரம் பயன்படுத்தும் போது, காற்றில் இருக்கும் ஈரப்பதத்த்டை முழுமையாக நீக்கிவிடுமாம். இதனால், உடலிலும் நீர்ச்சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, ஏசியில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி நீர்ச்சத்து குறையும் போது, சருமம் வறண்டு போய், கண்களில் எரிச்சல் ஏற்படுமாம். மேலும், மூச்சு விடுவதிலும் அசௌகரியம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சளி:
அதிக நேரம் ஏசியில் உட்காருவதால், உடலில் நோயெதிர்ப்பு தன்மை குறைவதாக கூறப்படுகிறது. இதனால், சளி, தலைவலி, நோய்கள் உள்ளிட்டவை எளிமையாக வந்துவிடுமாம்.
சுவாசக்கோளாறுகள்:
ஏசியாக இருந்தாலும், மின்விசிறியாக இருந்தாலும் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அப்படி செய்யவில்லை என்றால், அதில் படிந்துள்ள தூசிகளின் காரணமாக சுவாசகோளாறுகள் உள்ளிட்ட சில மூச்சு பிரச்சனைகள் ஏற்படலாம்.
சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை:
ஏசியில் வேலை பார்க்காமல், திடீரென்று அதற்கு பழகும் போது பல வித மாற்றங்கள், நம் உடலில் ஏற்படலாம். ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த ஏசி உங்களுக்கு பழகி விடும். ஆனால், அதுவே அலுவலகத்தை அல்லது வீட்டை விட்டு வெளியே வரும் போது அந்த சூழலுக்கு ஏற்பவாறு உடல் நிலை மாற சிரமமாக இருக்கும்.
தசை பிரச்சனை:
ஏசியிலோ, அல்லது சாதாரணமாகவோ ஒரு இடத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்தால் அது தசை பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். தசை பிடிப்பு, எடை ஏறுதல் போன்ற பிரச்சனை இதனால் உருவாகலாம்.
மேலும் படிக்க | காதலி விலகி செல்வதற்கான 5 அறிகுறிகள், முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்
சோர்வு:
தொடர்ந்து குளிரான ஒரு சூழலில் இருப்பதால், மிகவும் சோர்வான அல்லது மந்தமான மனநிலை உருவாகலாம்.
ஏசியை பயன்படுத்த எந்த முறை சிறந்தது?
ஏசியில் அதிகமாக அமர நேரிட்டால் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்ட்ம்.
humidifier சாதனத்தை பயன்படுத்தி, ஏசியால் ஏற்படும் வறட்சியை பாலன்ஸ் செய்ய முடியும்.
ஏசியை மாதம் ஒரு முறை ஆவது சுத்தம் செய்ய வேண்டும்.
ஏசியை மிகவும் குளிரூட்டும் வகையில் வைத்திருத்தல் கூடாது
ஏசியினால் சருமம் வறட்சி ஆகலாம். இதை தடுக்க, மாய்ஸ்ட்ரைசர் உள்ளிட்ட சில க்ரீம்களை மருத்துவர்களின் பரிந்துரைக்கு பிறகு பயன்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ