AC not cooling: தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வெயிலை தாங்க முடியாமல் பலரும் தங்களது வீடுகளில் ஏசி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிக வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று மட்டுமே நிவாரணம் தருகிறது. உடலை அதிக ஹீட்டில் இருந்து தற்காத்து கொள்ள ஏசி உதவுகிறது. இருப்பினும், சில நேரங்களில் ஏர் கண்டிஷனரில் இருந்து வரும் காற்று அவ்வளவு கூலிங்கை தருவதில்லை. அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றால் ஹீட்டை சமாளிக்க முடியாது.
ஏசியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் 16 டிகிரியில் ஓடினாலும் குளிர்ந்த காற்றைக் கொடுக்காது. இதற்கு ஏசியில் படிந்துள்ள அழுக்கு மற்றும் தூசியும் காரணமாக இருக்கலாம். ஏசியில் உள்ள பில்டரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் ஏசியில் இருந்து சரியாக கூலிங் வராது. அடிக்கடி ஏசியை சர்வீஸ் செய்தாலும் அதிகம் செலவு வைக்கும். இது போன்ற சூழ்நிலையில் வீட்டிலேயே அவற்றை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொண்டால் செலவை குறைக்கலாம். ஏசி ஃபில்டர்களை எப்படி சுத்தம் செய்து நல்ல கூலிங்கை வர வைக்கலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஏசி ஃபில்டர்களை சுத்தம் செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ள ஏசி சரியாக குளிர்ச்சியடையவில்லை என்றால், அதன் பில்டர்களை கழட்டி ஒருமுறை சுத்தம் செய்து பார்க்கலாம். பழைய ஏசிகளில் உள்ள ஃபில்டர்கள் விரைவில் அழுக்காகிவிடும். பில்டர்களில் அழுக்கு படியும் போது ஏசியில் இருந்து வரும் குளிர்ச்சியை குறைகிறது. எனவே, அவற்றை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
ஏசி ஃபில்டர்களை சுத்தம் செய்ய முதலில் ஏசி மெயின் சுவீட்சை ஆஃப் செய்து கொள்ளுங்கள். விண்டோ ஏசி மற்றும் ஸ்பிளிட் ஏசி என எதுவாக இருந்தாலும் 15 நாட்களுக்கு ஒருமுறை பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஏசியை முன்பக்கத்திலிருந்து திறந்து அதன் உள்ளே இருக்கும் பில்டர்களை அகற்றி அதில் உள்ள தூசியை சுத்தம் செய்து, பின்னர் தண்ணீர் வைத்து கழுவவும்.
பிறகு உங்களின் விருப்பத்திற்கேற்ப சோப்பு அல்லது கிளீனர் வைத்து நன்கு துடைக்கலாம். அதனுள் இருக்கும் ஈரத்தை துணியை வைத்து துடைத்து கொள்ளுங்கள். அதே போல, ஏசி ஃபில்டரை சுத்தம் செய்ய வெந்நீர் மற்றும் வினிகரையும் பயன்படுத்தலாம். பில்டரை சுத்தம் செய்தவுடன் வெயிலில் சிறிது நேரம் காய வைக்கவும். பிறகு ஏசியில் பொருத்தினால் முன்பு இருந்ததை விட நல்ல கூலிங் வர வாய்ப்புள்ளது. இந்த முறையிலும் ஏசி கூலிங் ஆகவில்லை என்றால் சர்வீஸ் செய்வது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ