தமிழ் சினிமாவில் தற்போது படு பிசியாக இருக்கும் காமெடி நடிகர்களில் நடிகர் சூரியும் ஒருவர். நடிகர் சூரி பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது. சூரியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானோர் இதைப் பற்றி அதிகம் பேசி வருகிறார்கள். இதனுடன் சூரி பற்றி முன்னர் தெரியாத பல விஷங்களும் தற்போது பேசுபொருளாகி உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் ஆகும் நடிகர் சூரி


சூரி பற்றிய ஒரு முக்கிய விஷயம் சமீபத்தில் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. திரையில் மக்களை சிரிக்க வைக்கும் சூரி நிஜ வாழ்விலும் பலரது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறாராம். உதவி கேட்டு வரும் பலருக்கு அவர் பல விதங்களில் உதவி வருவதாகவும் அவருக்கு நெருங்கிய பலர் தெரிவித்துள்ளனர். 


திரையில் ஒரு சிறிய கடையில் அமர்ந்து பரோட்டா  சாப்பிடும் சவாலை ஏற்றுக்கொள்ளும் சூரிக்கு நிஜ வாழ்விலும் உணவகங்களுடன் சம்பந்தம் உள்ளது. சூரியின் சொந்த ஊரான மதுரையில் அவருக்கு பல உணவகங்கள் உள்ளன. இது மட்டுமின்றி அவர் இந்த உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறார். 


மேலும் படிக்க | சூரியின் ஹோட்டலை திறந்துவைத்த அமைச்சர்


சூரிக்கு இவ்வளவு சொத்தா?


பல உணவகங்கள், பல படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் என நடிகர் சூரியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு சுமார் ரூ. 40 கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும், இந்த தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி தெளிவாகத் தெரியவிலை. எனினும், நடிகர் சூரியின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு மத்தியின் சூரியின் சொத்து மதிப்பு பற்றிய செய்தி வைரலாக பரவி வருகின்றது.  


ஹீரோவாக படு பிட்டாக மாறிய சூரி


தற்போது சூரி அடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ளார். காமெடி நடிகரான சூரி, வெற்றிமாரன் இயக்கத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ‘விடுதலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக சூரி தன் தோற்றத்தையே மாற்றியுள்ளார் என்றே கூறலாம். இப்படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சுடன் நடந்து வருகிறது. ஹீரோவாக சூரியை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்னும் சில முக்கிய இயக்குனர்களின் படங்களிலும் அவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



ஆரம்பமே அபாரம்


‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன சூரி, அதற்கு முன் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். யார் பார்த்தாலும், மிகவும் அறிமுகம் ஆனவர் போன்ற ஒரு முகத்தோற்றத்தைக் கொண்டுள்ள அவர் எளிதில் ரசிகர்களின் உள்ளதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். சினிமா உலகமும் அவரை இரு கரம் நீட்டி வரவேற்றது.


வெண்ணிலா கபடிகுழு படத்தில் பரோட்டா சாப்பிடும் சவாலில் அவர் நடித்து கலக்கிய காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன் பின்னர் அவர் ரசிகர்களுக்கு பரோட்டா சூரி ஆனார். இயல்பான நடிப்பாலும், முகம் சுளிக்க வைக்காத காமெடியாலும், வித்தியாசமான வசனங்களாலும் அவர் பிரபலமானார். எந்த ஹீரோவுடன் அவர் நடித்தாலும், அவரது காம்பினேஷன் அந்த ஹீரோவுடன் செட் ஆகிவிடும். இது நடிகர் சூரியின் தனிச்சிறப்பு. சமீபத்தில் வெளிவந்த நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் இவரது காமெடி காட்சிகள் மக்களை மனம் விட்டு சிரிக்க வைத்தன. பல படங்கள் தோய்வில்லாமல் நகர்வதற்கு இவரது காமெடி முக்கிய காரணமாக இருக்கின்றது. 


மேலும் படிக்க | பிரியங்கா சோப்ராவின் காஸ்டிலி பொருட்களின் விலை - ஆடிப்போன ரசிகர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR