பிரியங்கா சோப்ராவின் காஸ்டிலி பொருட்களின் விலை - ஆடிப்போன ரசிகர்கள்!

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ராவின் காஸ்டிலி பொருட்களின் விலையை கேட்டு ரசிகர்கள் ஆடிப்போய் இருக்கின்றனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 7, 2022, 03:50 PM IST
  • பிரியங்கா சோப்ராவின் காஸ்டிலி பிராண்டு
  • அமெரிக்காவில் புதிய பிஸ்னஸில் கால் பதித்துள்ளார்
  • விலையைக் கேட்டு அமெரிக்கர்களே ஆடிப்போயுள்ளனர்
பிரியங்கா சோப்ராவின் காஸ்டிலி பொருட்களின் விலை - ஆடிப்போன ரசிகர்கள்! title=

இந்தியாவின் பிரபல நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ரா இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். பிரப பாப் பாடகர் நிக் ஜோன்ஸைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், சொகுசு பங்களா ஒன்றை வாங்கி அங்கே வசித்து வருகிறார். மேலும், ஹாலிவுட் படங்களிலும், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், ஹோம் பிராண்டுகளைக் கொண்ட புது பிஸ்னஸ் ஒன்றிலும் கால் பதித்துள்ளார். 

மேலும் படிக்க | சீரியலுக்கு முழுக்கு; சுந்தரி, கண்ணம்மாவுக்கு கிடைத்த மாஸ் அங்கீகாரம்

ஏற்கனவே சோனா என்ற உணவகத்தை தொடங்கிய அவர், தற்போது சோனா ஹோம்ஸ் என்ற பெயரில் ஹோம்வேர் பிராண்டு பிஸ்னஸில் கால்பதித்துள்ளார். உணவகத்தில் பார்ட்னராக இருக்கும் மணீஷ் கோயலுடன் இணைந்து இந்த பிஸ்னஸை தொடங்கியிருக்கிறார். அவருடைய ஹோம்வேர் பிராண்டான ‘சோனா ஹோம்ஸ்’-ல் டேபிள் கிளாத் முதல் சட்னி பாட்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதில் இருக்கும்  அனைத்து பொருட்களின் விலையும் தலை சுற்ற வைக்கின்றன. மிக மிக காஸ்டிலியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

சாதாரண டேபிள் கிளாத் ஒன்று 398 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 31 ஆயிரம் ரூபாயாகும். டேபிள் ரன்னர் அமெரிக்க டாலரில் 178 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்திய ரூபாயில் 14 ஆயிரம் ரூபாய். ஒரு கப் சாசர் செட் 5,300 ரூபாய்க்கும், சட்னி பாட்கள் 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 2 செட் பிரெட் பேஸ்கட்டின் விலை இந்திய மதிப்பில் 7500 ரூபாய். இனிப்பு அல்லது சாலட் பரிமாறும் தட்டின் விலை இந்திய மதிப்பில் 3,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் விட ஒரு காபி செட் 3,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் டீசர் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News