சூரியின் ஹோட்டலை திறந்துவைத்த அமைச்சர்

நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தை நிதித்துறை பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 24, 2022, 06:22 PM IST
  • சூரியின் ஹோட்டலை திறந்துவைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
  • மதுரை இராசாசி மருத்துவமனை வளாகத்தில் ஹோட்டல் அமைந்துள்ளது
சூரியின் ஹோட்டலை திறந்துவைத்த அமைச்சர் title=

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசு மருத்துவனை டீன் ரத்தினவேல், நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் ஆட்சியின் மற்றும் எங்கள் முதல்வரின் சிறந்த அடையாளங்களாக கருத்துவப்படுவது திராவிட இயக்கத்தில் முதன்மையான மனிதநேயம் ஆகும். யாரையும் பின் தங்க விடக்கூடாது அனைவருக்கும் சமவாய்ப்பு தர வேண்டும். துயரத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் மனிதநேயம் முதலாவதாக உள்ளது.

இரண்டாவது செயல்திறன், யார் வேண்டுமானாலும் வாயில் வடை சுடலாம். எத்தனையோ வாக்குறுதிகளை கொடுக்கலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி தந்துள்ளதோடு மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதி கொடுத்துள்ளோம். இந்த உணவகம் சாதாரண உணவகமாக தெரியலாம். ஆனால் இதன் பின்னால் மாபெரும் வெற்றி இருக்கிறது.

Soori

கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் இன்னொரு நபர் உணவகம் நடத்தி வந்தார். ஜனவரி மாதம் அவர்களின் டெண்டர் முடிந்தபோது இந்த மருத்துவமனைக்கு அந்த உணவகம் மூலம் வந்து கொண்டிருந்த மாத வருமானம் ரூ.7,000 ஆகும். புதிதாக டெண்டர் விடப்பட்டு தற்போது அரசுக்கு இந்த மருத்துவமனைக்கு கிடைக்க உள்ள மாத வருமானம் ரூ.1 லட்சம் ஆகும். 

இரண்டாவது தரமான உணவு பொருட்களை குறைவான விலைக்கு கொடுப்பதை இலக்காக கொண்டு, ஏற்கனவே துயரத்தில், உடல் ரீதியான பிரச்சனைகளோடு இங்கு வருபவர்களுக்கு குறைவான விலையில் தரமான உணவை தர வேண்டும் என யோசித்து வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் விடப்பட்டு சிறப்பான நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கிண்டி கிங்ஸ் மருத்துவமனை விரைவில் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதன் மூலம் கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடைபெற்று இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். சிலர் தவறான நபர்கள் ஒப்பந்தத்தை போட்ட பிறகு நீதிமன்றம் சென்று வழக்கு போட்டு அதனை இழுத்தடிக்க நினைத்தார்கள். இந்த நல்ல விஷயத்தையும் அதன் மூலம் தடுக்க நினைத்தார்கள். 

ஆனால் நல்ல நீதிபதி, வழக்கறிஞர்கள், நேர்மையான அதிகாரிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், அரசு மருத்துவமனை டீன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இதனை சிறப்பாக செய்துள்ளோம்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News