இயக்குனர் அமீர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக சூரி?

நகைச்சுவை நடிகர் சூரி இயக்குனர் அமீர் இயக்கப்போகும் புதிய படமொன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 07:26 PM IST
  • 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் சூரியின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.
  • தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக சூரி மாறிவிட்டார்.
இயக்குனர் அமீர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக சூரி?  title=

2009ல் வெளியான 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் சூரி(soori).  இதற்கு முன்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, இந்த படம் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது.  அதன்பின்னர் இவருக்கு வரிசையாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  மேலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் இவரின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது. தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக சூரி மாறிவிட்டார். 

viduthalai

அதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.  பின்னர் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி படத்திற்கு 'விடுதலை' என்று பெயரிடப்பட்டது.  மேலும் சூரியின் சில புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடம் ஆவலை உண்டாக்கியது.  இப்படத்தின் பணிகள் ஓரளவு முடிவடைந்துவிட்ட நிலையில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

amir

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதனை தொடர்ந்து அமீர் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.  இந்நிலையில் இவர் நடிகர் சூரியை வைத்து புதிய படமொன்றை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படம் குறித்த உறுதி தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், விரைவில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News