முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கென தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.


ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாக செயல்பட்டு வருவது போல், கேரள திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.


மேலும் படிக்க | Latest OTT Releases This Week : ராயன் to கல்கி-தெறிக்கவிடும் புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?


கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL 
போட்டிகள் நடக்கவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 


KCL கேரளா கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பாஸிடராக, முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.


கேரளாவின் முக்கிய நகரங்களிலிருந்து மொத்தமாக 6 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன. மொத்தமாக 33 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொத்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. ஐபில் போலவே பல நட்சத்திரங்களும், பிஸினஸ் ஐகான்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்குவிக்கவுள்ளனர். விரைவில் போட்டி அணிகள், போட்டி அட்டவணைகள், வீரர்கள் அறிமுகம், மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது, முதல் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டும் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Latest News Jennifer Lopez Ben Affleck Divorce : 4வது கணவரை பிரியும் 55 வயது பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ