தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.  பாலிவுட் அரங்கிலும் தனது பெயரை நிலைநாட்டி வரும் வேலையில், அவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான தனது 4 வருட திருமணத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர்


சமந்தா விவாகரத்துக்குப் பிறகு நிறைய ட்ரோல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டார், ஆனால் சமந்தா இதையெல்லாம் மனதில் எடுத்துக்கொள்ளாமல் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார்.  சரியான விமர்சனங்கள் வரும்போது அமைதியான வழியில் தன் நிலைப்பாட்டை விளக்கியிருந்தாலும், இன்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது மனநிலையை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.  சமந்தா தனது ட்வீட்டில், "என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். கருணைக்கு ஒரு காலாவதி தேதி இருக்கலாம் #JustSaying" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகை யாரை குறிவைத்து ட்வீட் செய்தார் என நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.


 



சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்த சமந்தா இந்தியா முழுவதும் பேசுபொருளானார்.  நேற்று சமந்தா நடித்த காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.  இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், சமந்தாவின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.



மேலும் படிக்க | வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டிரெய்லர் ! எப்படி இருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR