'வலிமை' கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள 'துணிவு' படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.  ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் தூண்டும் விதமாக சமீபத்தில் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.  அஜித் ரசிகர்கள் ஒருபுறம் படத்தின் ட்ரைலரை கொண்டாடினாலும் வழக்கம்போல மறுபுறம் சிலர் இந்த ட்ரைலரை ட்ரோல் செய்து வருகின்றனர்.  பீஸ்ட் படத்தை காபி அடித்தது போல துணிவு படம் உள்ளது என்றும், தூக்குதுரையின் சாயல் தான் தெரிகிறது என்றும் சிலர் நக்கலடித்து வருகின்றனர்.  இருப்பினும் இந்த ட்ரைலர் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, இந்த வீடியோவை இணையத்தில் இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொஞ்சம் ஹேர் ஸ்டைல் சரி பண்ணுங்க! விஜய்க்கு அட்வைஸ் செய்த பிரபலம்!



துணிவு படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது மற்றும் இதில் 13 கட் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் 'துணிவு' படம், விஜய்யின் 'வாரிசு' படத்தோடு மோதப்போகிறது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 'துணிவு' படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  'துணிவு' படம் ஜனவரி 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டது, அதே நாளில் தான் விஜய்யின் 'வாரிசு' படமும் வெளியாகிறது.  இந்நிலையில் 'துணிவு' படத்தை 'வாரிசு' படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் அதாவது ஜனவரி 11ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.



ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தில் அஜித்துடன், மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், மமதி சாரி, ஜி,பி.முத்து, மகாநதி ஷங்கர் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


மேலும் படிக்க | Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்... இவர்தான் காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ