தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடங்கியது! எங்கே தெரியுமா? பிரபல நடிகர் கொடுத்த அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தின் சூட்டிங் பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 2, 2023, 06:22 PM IST
  • தளபதி 67 சூட்டிங் தொடங்கியது
  • விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு
  • சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு
தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடங்கியது! எங்கே தெரியுமா? பிரபல நடிகர் கொடுத்த அப்டேட் title=

வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். மாஸ்டர் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறது. விக்ரம் படத்தை முடித்தவுடன் தளபதி 67 படத்திற்கான பணிகளை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், விஜய்யின் வருகைக்காக காத்திருந்தார். வாரிசு படத்தை முடித்துவிட்டு விஜய்யும் வந்துவிட்டதால், சென்னையில் பூஜையுடன் படத்தின் சூட்டிங் தொடங்கியிருக்கிறது. இந்த அப்டேட்டை பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தளபதி 67 அப்டேட்

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் தளபதி 67. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க அனிரூத் இசையமைக்கிறார். படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக 10 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை வித்தியாசமான குட்டி ஸ்டோரியுடன் அறிவிக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. விரைவில் தளபதி 67 குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க | Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்... இவர்தான் காரணமா?

மனோபாலா டிவிட்

தளபதி 67 சூட்டிங் குறித்து தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இயக்குநர் மனோ பாலா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில், தளபதி 67 திரைப்படத்தின் சூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி ஆகியோரை செட்டில் சந்தித்தாகவும், அதே எனர்ஜி, புல் ஸ்விங்.. அடி தூள் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த டிவிட் இப்போது டிவிட்டரில் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. 

மன்சூர் அலிகான்

விஜய்யுடன் சேர்ந்து இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்சூர் அலிகான் அண்மையில் தான் அளித்த பேட்டி ஒன்றிலும் இதனை குறிப்பிட்டார். இவர்கள் மட்டுமல்லாது கவுதம் வாசுதேவ் மேனனும் தளபதி 67 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வாரிசு புரோமோஷன் பணிகள் இருப்பதால், அதற்குப் பிறகு தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | கொஞ்சம் ஹேர் ஸ்டைல் சரி பண்ணுங்க! விஜய்க்கு அட்வைஸ் செய்த பிரபலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News