Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்... இவர்தான் காரணமா?

Varisu trailer release date : வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஜன. 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தாமதமானதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 2, 2023, 10:57 AM IST
  • வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வாரிசு.
  • வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடத்தப்பட்டது.
  • வாரிசு டிரைலர் தொடர்ந்து தாமதம்.
Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்... இவர்தான் காரணமா? title=

Varisu trailer release date : இன்னும் பொங்கலுக்கு சுமார் 2 வாரங்கள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில், இரு உச்ச நச்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்கிற்கு வர உள்ளது. கடைசியாக வீரம் - ஜில்லா ஆகிய திரைப்படங்களை ஒன்றாக ரிலீஸ் செய்த அஜித் - விஜய், இம்முறை துணிவு - வாரிசு படங்களை ஒன்றாக வெளியிட உள்ளனர். 

இதில், விஜய் நடிப்பில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். குடும்பங்களும், ரசிகர்களும் இணைந்து கொண்டாடும் படமாக இருக்கும் கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

முதலில் வந்த துணிவு டிரைலர்

எனவே, ரசிகர்கள் வாரிசு படத்தின் டிரைலரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். முதலில், புத்தாண்டையொட்டி டிரைலர் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், துணிவு படத்தின் டிரைலர் முதலில் வெளியானது. டிச. 31ஆம் தேதி துணிவு டிரைலர் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தூள் கிளப்பும் துணிவு டிரைலர்... வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

துணிவை அடுத்து, ஜன. 2ஆம் தேதி வாரிசு டிரைலர் ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பு புத்தாண்டில் வரும் எனவும் ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் பரவின. அதற்கு ஏற்றாற்போல் புத்தாண்டு பிறந்த உடன், ஒரு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தது. ஆனால், அதில், டிரைலர் குறித்த அப்டேட் எதுவும் இல்லை. நேற்று முழுவதும் டிரைலர் அப்டேட் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இயக்குநரின் தாமதம்...?

அந்த வகையில், வாரிசு படத்தின் டிரைலர் ஜன. 4ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் சென்சார் வேலைகள் முடிந்தவுடன், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வாரிசு டிரைலர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் கடைசி கட்ட வேலைகள் கிறிஸ்துமஸ் பண்டிகை தாண்டியும் நடைபெற்றதாகவும், இயக்குநர் வம்சி திருத்தப்பட வேண்டிய காட்சிகளை எடுக்க சற்று தாமதித்ததாக கூறப்படுகிறது. எனவேதான், வாரிசு சென்சாருக்கு செல்ல தாமதமானது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, வாரிசு படம் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் என்றும் துணிவு 2 மணிநேரம் 23 நிமிடங்கள் என்றும் தகவல் ட்விட்டரில் பரவி வருகிறது. இருப்பினும், இரு படங்களின் சென்சார் வேலைகளும் இன்னும் நிறைவுபெறவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. அதனால்தான், சென்சார் முடியாமல் இரு படக்குழுவும் ரிலீஸ் தேதியை விதிப்படி அறிவிக்காமல் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பார்த்தால் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வாரிசு படக்குழு தான் அறிவிக்கும் என தெரிகிறது.  

மேலும் படிக்க | ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் துணிவின் சாதனை - ஆச்சரியத்தில் கோலிவுட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News