புதுடெல்லி: திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் ட்ரோல் செய்யப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, மற்றவர்களை ட்ரோல் செய்யும் நபர்கள் தங்கள் விரக்தியை ஆன்லைனில் காட்டுவதாக கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் தனது சமூக ஊடக கணக்கில் பல்வேறு  கருத்துக்களை எதிர்கொள்கிறார், சமீபத்தில் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில்  தான் இறந்துவிட்டதாக கிளப்பிவிடப்பட்ட புரளிக்கு அவர் வேடிக்கையான பதிலை தெரிவித்தார். திரைப்பட பின்னணி கொண்ட, பிரபலமான KRK Box Office நிறுவனத்தின் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்கிலிருந்து "death"  என்ற டிவிட்டர் வெளிவந்தது. இந்த நிறுவனம் நடிகர்-விமர்சகர் கமல் ஆர் கானின் பாலிவுட் செய்திகளுக்கான தளம் மற்றும் வர்த்தக பகுப்பாய்வு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்திக்கு பதிலளித்த அனுராக், தன்னை மீண்டும் பூமிக்கு அழைத்து வந்தார் எமன் என்று தெரிவித்தார்.  ஏன் தெரியுமா? தான் இருந்தால் தான், பலருடைய   வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும் என்பதை எமன் அறிவார் என்று வேடிக்கையாகவும்   நையாண்டியாகவும் பதிலடி கொடுத்திருந்தார். KRKவின் டிவிட்டர் செய்தியில் "#RIP #AnuragKashyap!  அவர் உண்மையிலேயே ஒரு சிறந்த கதைசொல்லியாக இருந்தார்! நாங்கள் எப்போதும் உங்கள் இழப்பை உணர்வோம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


அதற்கு பதிலளித்த அனுராக்,  "எமன் வீட்டிற்கு வந்து என்னை நேரடியாகவே வீட்டில் விட்டுச் சென்றார். இன்னும் பல படங்கள் எடுக்கவேண்டும். நீ, திரைப்படம் எடுத்து, அதை விமர்சிக்காவிட்டால் பல முட்டாள்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாக போய்விடும். எனவே, நீ இங்கேயே இரு என்று சொல்லி, என்னை இங்கே விட்டுச் சென்றுவிட்டார். நேற்று தான் அவரை சந்தித்தேன். அவர் இன்று என்னை கொண்டு வந்து மீண்டும் பூமியில் விட்டுவிட்டார், இதனால் சிலருடைய வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க நான் அவர்களுக்கு உதவ முடியும்" என்று சூடு கொடுத்துள்ளார்.



அனுராக் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. ட்ரோல் செய்யப்படுவது பற்றி 2018 ஆம் ஆண்டில் பி.டி.ஐ அவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் இது... “வழக்கமாக ட்ரோல் செய்யும் நபர்கள் தங்கள் விரக்தியை சமூக ஊடகங்களில் பிரதிபலிக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.


"அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இருக்கிறோம். எனவே அதிக மனக்கசப்பு, அளவுக்கு மீறிய அடக்குமுறை, உணவு தேவைப்படும் பலர், வேலை தேடும் பலர், ஏமாற்றமடைந்த பலர் என பல்வேறு விதமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் விரக்தியடையும் போது, பிறரை வாரித்தூற்றி பேசினால் நன்றாக உணர்கிறார்கள் போலும்" என்று அனுராக் கூறியிருந்தார்.


நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி கோஸ்ட் ஸ்டோரிஸில் ஒரு பகுதியை  அனுராக் இயக்கியிருந்தார் மற்றும் Netflixஇல் வெளியான Paisa Bolta Hai அனுராக் காஷ்யப்புக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. Ghoomketu என்ற திரைப்படத்தில் ஊழல் செய்யப்படும் போலீஸ் அதிகாரியாக நடித்தார், இதில் நவாசுதீன் சித்திகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


Also Read | நாடாளுமன்றம்: மாநிலங்களவையில் 6, மக்களவையில் 17 MPக்களுக்கு கொரோனா பாதிப்பு!!!