தமிழ் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்படும் டாப்பிக், பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனில் முக்கிய போட்டியாளராக கருதப்படுபவர்களுள் ஒருவர், விசித்ரா. இவர், ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:


ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தாலும், தமிழில் பிக்பாஸ் தொடங்கப்பட்டது 2017ஆம் ஆண்டில்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசும் கருத்துகள் விவாதத்திற்குரியதாக மாறுவதும், இன்னொரு பிரச்சனை வந்தவுடன் அந்த விவாதம் அப்படியே முடிந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படி, கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 7. அனைத்து சீசன்களையும் போல இந்த சீசனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.


முன்னர், பிக்பாஸ் போட்டியில் கொஞ்சம் பிரபலமான நடிகர்களையும் துணை நடிகர்களையும் போட்டியாளர்களாக களமிறக்கி வந்தனர். இந்த சீசனில், டிவி திரையில் தெரிந்த முகங்களை விட டிஜிட்டல் திரையில் தெரிந்த முகங்களை அதிகமாக பார்க்க முடிந்ததது. 90களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவராக இருந்த விசித்ரா, சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, பிக்பாஸிற்குள்ளும் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.


விசித்ராவின் சம்பள விவரம்…


தற்போது பிக்பாஸ் இல்லத்திற்குள் இருக்கும் போட்டியாளர்களுள் அதிக வயதுடையவர் விசித்ராதான். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருடனும் சண்டை போட்டு வம்பு வளர்த்தாலும் பின்னர் அம்மா செண்டிமெண்டால் அனைவரையும் தாக்கி விடுகிறார். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் “ஏண்டா இங்க வந்தோம்..” என்று துக்கத்தில் இருந்த இவர், அடுத்த வாரமே அதிரடி காட்டி போட்டியில் அனைவரையும் தூக்கிப்பாேட்டு மிதித்தார். விசித்ரா, ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம். மக்களின் ஆதரவை பெரும்பாலும் பெற்றுள்ள போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். 


மேலும் படிக்க | தடபுடலாக நடந்த பிரபு வீட்டு திருமணம்! மகளுக்காக அவர் கொடுத்த வரதட்சனை எவ்வளவு தெரியுமா?


பிக்பாஸ் டீமிடம் வருத்தம் தெரிவித்த விசித்ரா..


நடிகை விசித்ரா, முன்னர் கவர்ச்சி நடிகையாக இருந்தார். 2000ம் ஆண்டிற்கு பிறகு, திரையுலகை விட்டு விலகியிருந்த விசித்ரா அதற்கான காரணம் என்ன என்று பிக்பாஸின் ‘பூகம்பம்’ டாஸ்கில் மனம் திறந்தார். அப்போது, ஒரு பிரபல நடிகர் அவரது ஆசைக்கு இணங்காததால் தன்னை படக்குழுவினரை வைத்து துன்புருத்தியதாகவும், இதனால் தான் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதுதான் சினிமாவில் இருந்து விலகியிருக்க காரணம் என்றும் தெரிவித்தார். 


கடந்த வாரம், பிக்பாஸில் திறமையை வெளிக்காட்டும் டாஸ்க் நடைப்பெற்றது. இதில் விசித்ரா ஆடும் போது “என் பேரு மீனாக்குமாரி” பாடல் போடப்பட்டது. இதில் கொஞ்சமாக ஆடிய விசித்ரா, பின்னர் சரவண விக்ரமிடம் தனக்கு அப்படி போடப்பட்ட பாடல் பிடிக்கவில்லை என்றும் இந்த இமேஜை உடைக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்து விட்டு, இப்படி மீண்டும் அதே போன்ற பாணிக்கு செல்வது போல உள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கடுத்த வீக் எண்ட் எபிசோடில் அதற்கான விளக்கத்தை கொடுத்தார். 


பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் மக்களை ஓரளவிற்காவது போர் அடிக்காமல் பார்த்துக்கொள்பவர்களுள் ஒருவர், விசித்ரா. இவரால் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டாலும், அது மீண்டும் இவராலேயே தீர்ந்து விடும். இதனால், இவர் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்களாக தாக்குப்பிடித்து கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | 3 விநாடி நடனமாட ரூ.2 லட்சம் சம்பளம் கேட்ட இன்ஸ்டா பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ