தடபுடலாக நடந்த பிரபு வீட்டு திருமணம்! மகளுக்காக அவர் கொடுத்த வரதட்சனை எவ்வளவு தெரியுமா?

Aishwarya Prabhu Adhik Ravichandran Wedding: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதற்காக கொடுக்கப்பட்ட வரதட்சனை எவ்வளவு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 20, 2023, 01:39 PM IST
  • பிரபுவின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது.
  • பிரபு தன் மகளுக்காக பல கோடிகளை வரதடசனையாக கொடுத்தாராம்.
  • மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?
தடபுடலாக நடந்த பிரபு வீட்டு திருமணம்! மகளுக்காக அவர் கொடுத்த வரதட்சனை எவ்வளவு தெரியுமா?  title=

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா பிரபுவிற்கு, 5 நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 15) பிரபலங்கள் புடை சூழ, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடைப்பெற்றது. இதில், தனது மகளை திருமணம் செய்து வைக்க நடிகர் பிரபு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சீதன விவரங்கள் வெளியாகியுள்ளன. 

பிரபுவின் மகளுக்கு திருமணம்..

தாத்தா-தந்தை-பேரன் என மூன்று தலைமுறைகளாக திரைத்துறையில் காலூன்றி வருகின்றனர், நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தார். தந்தை, ‘நடிகர் திலகம்’ பட்டத்தை வாங்க, தான் நடித்த படம் மூலம் இன்றுவரை பலரால் ‘சின்னத்தம்பி’ என்று அறியப்படுகிறார், பிரபு. இவரது மகன் விக்ரம் பிரபுவோ சிறிய பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என அனைத்திலும் நடித்து வருகிறார். பிரபுவிற்கு ஐஸ்வர்யா என்ற இளைய மகளும் உள்ளார். இவருக்கும், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது. 

Prabhu Daughter Wedding

தடபுடலாக நடைப்பெற்ற திருமணம்..

டிசம்பர் 15ஆம் தேதி, ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் நடைப்பெற்றது. இதில், இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஷால், வரலக்‌ஷ்மி சரத்குமார், ஷாலினி அஜித்குமார், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை நடந்த பல கோடிகள் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது மட்டுமன்றி, மகளை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் அதற்கு வரதட்சனையாக நடிகர் பிரபு பல கோடிகளை பொருட்களாகவும், ரொக்கமாகவும் கொடுத்திருக்கிறாராம். 

மேலும் படிக்க | கிரைம், திரில்லராக உருவான “அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா

இத்தனை கோடியா..!

ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.500 கோடி வரதட்சனையாக கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் தக்க ஆபரணங்கள், விலை உயர்ந்த வீட்டு உபயோகப்பொருட்கள், வீட்டு மனை ஒன்று என பல அடங்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆதிக் போட்ட கண்டீஷன்..!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள சில கண்டீஷன் பாேட்டாராம். அதில் ஒன்று, திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்பது தானாம். பெரிய ஸ்டார் வீட்டு திருமணமாக இருந்தாலும், இந்த திருமணம் கொஞ்சம் எளிமையாகவே நடத்தப்பட்டிருந்ததது. ஆனாலும், பிரபலங்கள் பலரது வருகையால், கடந்த சில நாட்களாக இந்த திருமண நிகழ்வு பெரிய பேசு பொருளாக உள்ளது. 

இரண்டாவது திருமணம்..

பிரபு, தனது மகள் ஐஸ்வர்யாவை தனது தங்கை மகன் குணாலுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். திருமணமான பிறகு ஐஸ்வர்யா தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் திருமண உறவை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, தற்போது சொந்தமாக பேக்கரி ஒன்றையும் வைத்திருக்கிறார்.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், 2015ஆம் ஆண்டு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். அதன் பிறகு, சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தையும் இயக்கினார். இந்த படமும், பாகீரா படமும் இவருக்கு தோல்வியை தந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில்தான், இவர்கள் இருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டருக்கிறது. 

மேலும் படிக்க | இந்த ஆண்டு மாஸாக கம்பேக் கொடுத்த தமிழ் ஹீரோக்களின் பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News