விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் இதுவரை நிறைவடைந்துவிட்டது.  கடந்த ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா தேஷ்பாண்டே ரன்னராகவும் வெற்றிபெற்றார்கள்.  இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என பலரும் காத்திருக்கின்றனர், இந்த நிகழ்ச்சி தான் நெட்டிசன்களுக்கு கன்டென்ட் குருவாக விளங்குகிறது என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.  பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் இந்த முறை யார் கலந்துகொள்ள போகிறார்கள் யாருக்கெல்லாம் ஆர்மி ஆரம்பிக்கலாம் என்று அவர்களும் ஒருபுறம் காத்திருக்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிக்கோளோடு காத்திருக்க அடிக்கடி பிக்பாஸ்-6 விரைவில் என்று ப்ரோமோவும் போட்டு போட்டு ரசிகர்களிடம் விஜய் தொலைக்காட்சி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக பிரபலங்கள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்கிற அறிவிப்பும் வெளியானது, இது ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்திருக்கிறது.  எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்போவதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்கள் பட்டியலில் டிடி, ரக்ஷன், ராஜலக்ஷ்மி ஆகியோரின் பெயர்கள் அடிபடுவது வழக்கமான ஒன்று. 



மேலும் படிக்க | ஏகே63 அப்டேட் கேட்டு தெறித்து ஓடும் அஜித் ரசிகர்கள்!


அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் சில பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  அதன்படி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான திவ்யதர்ஷினி (டிடி) பெயர் முதலில் வந்துள்ளது, அதனை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான ரோஷினி, ராஜா ராணி-2 சீரியல் மூலம் பிரபலமான அர்ச்சனா பெயர் வந்துள்ளது, சமீபத்தில் அர்ச்சனா 'ராஜா ராணி-2' சீரியலை விட்டு அர்ச்சனா விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் சீரியலை விட்டு விலகினாரோ என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.  



அடுத்ததாக '7-சி' சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது சமூக ஊடகங்களை திறந்தாலே சிம்பு என்னை காதலிக்கிறார் என்று கூறிவரும் ஸ்ரீநிதியின் பெயரும் வந்துள்ளது, அடுத்ததாக 'வழக்கு எண் 18/9' படம் மூலம் பிரபலமான மனிஷா யாதவ், 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படம் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாதன், வழக்கம்போல சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி மற்றும் விஜே அஞ்சனா ஆகியோரின் பெயர்கள் வெளிவந்துள்ளது.


மேலும் படிக்க | 'சொப்பன சுந்தரி' ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ