ஏகே63 அப்டேட் கேட்டு தெறித்து ஓடும் அஜித் ரசிகர்கள்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே61' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நடிகர் அஜித் 'ஏகே63' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 6, 2022, 12:04 PM IST
  • அஜித் தற்போது ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
  • இந்த ஆண்டு இறுதியில் இப்படம் தொடங்க உள்ளது.
ஏகே63 அப்டேட் கேட்டு தெறித்து ஓடும் அஜித் ரசிகர்கள்! title=

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக எவ்வித பின்புலமும் இல்லாமல் இத்தனை ஆண்டுகாலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார்.  இன்றுவரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து பெரியளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.  'வலிமை' படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது மிகவும் பிசியாக இருந்து வருகிறார், சமீபத்தில் இவர் பைக்கில் லடாக் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது.  பைக்குடன் நின்று கெத்தாக  கொடுத்திருந்த போஸ்களை ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர்.

எப்போதும் நடிகர் அஜித் ஒரு படத்தில் முழுமையாக நடித்து முடித்த பின்னர் தான் அடுத்த படத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார், ஆனால் இப்போது அவர் தனது பாணியை மாற்றியிருக்கிறார்.  'வலிமை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது இவர் 'ஏகே61' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார், படத்தின் பாதியிலேயே இவர் 'ஏகே62' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.  'ஏகே62' படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குக்கிறார், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.  'ஏகே62' படம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் 'ஏகே63' படத்தில் அஜித் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ajith

மேலும் படிக்க | விஜய், அஜித்துக்கே இல்லை..ஆனா உதயநிதிக்கு கிடைத்த பெருமை!

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, இதுவரை அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தான் ஏகே63 படத்தை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.  இதுவரை 'v' என்கிற எழுத்திலேயே படத்திற்கு பெயர் வைத்திருந்த இயக்குனர் தற்போது 'ஏகே63' படத்திற்கும் அதே எழுத்தில் தான் பெயர் முடிவு செய்துள்ளாராம், படத்தின் பெயர் 'வரம்' என்று வைக்க ஏற்கனவே அவர் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ajith

மேலும் படிக்க | செல்ஃபியா எடுக்குற? செல்போனை கோபமாக பிடுங்கிய நடிகர் சித்தார்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News