மாதவன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக எழுப்பப்பட்ட போலி புகாரில் சிக்கி சிறை சென்று மீண்ட விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியிருக்கிறது. நம்பி நாரயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் இந்தியா படமாக உருவான இதில் தமிழ் மொழியில் சூர்யாவும், ஹிந்தி மொழியில் ஷாருக்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். கடந்த 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ராக்கெட்ரிக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.



இருப்பினும் நம்பியின் வாழ்க்கையில் நடந்த அவலங்களை படமாக்கியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்டோர் மாதவனுக்கு தங்களது பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | 'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே!


இதற்கிடையே படத்தின் இறுதிக்காட்சிகளில் வரும் நம்பி நாராயணன் சூர்யாவிடம் ஜெய்ஹிந்த் என்று கூறுவார். அதற்கு சூர்யா பதிலேதும் கூறியிருக்கமாட்டார். இதனையடுத்து சூர்யா ஜெய்ஹிந்த் என்று கூறமாட்டாரா என்று சிலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர். 


 



இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ தகவல்!


மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR