ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?
நடிகை த்ரிஷா, 20 வருடங்களை கடந்தும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இது எப்படி?
தமிழ் திரையுலகில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் த்ரிஷா. அழகு, திறமை, நளினம் என அனைத்தும் நிறைந்த நடிகைகள் இருந்தாலும் த்ரிஷா பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க காரணம் என்ன?
டாப் நடிகை த்ரிஷா:
ஜோடி படத்தில் துணை நடிகையாக வந்து அறிமுகமான த்ரிஷா, பின்னர் மெது மெதுவாக தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து, தென்னிந்திய அளவில் பிரபலமானார். 20 வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
20 வருடங்களாக தமிழில் டாப் நடிகையாக இருக்கும் இவர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவின் பணக்கார நடிகையாக இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக..
உலக அழகி பட்டம் பெற்று, பல வருடங்கள் ஆகியிருந்தாலும் இப்போது வரை இந்திய அளவில் உலக அழகியாக அறியப்படுபவர், ஐஸ்வர்யா ராய். பச்சன் குடும்பத்தின் மருமகளான இவர், அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் கதாநாயகிகளுள் இவரும் ஒருவர்.
பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் இவர், தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் சேர்ந்து அப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக த்ரிஷா வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், இவர்களுக்குள் இருக்கும் சம்பள ஒற்றுமை தானாம்.
மேலும் படிக்க | Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
இருவரும் வாங்கும் சம்பளம்..
நடிகை ஐஸ்வர்யா ராய், ஒரு படத்திற்கு தற்போது ரூ.10 முதல் 12 கோடி வரை வாங்குகிறாராம். இதே போல, தற்போது நடிகை த்ரிஷாவும் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் பயங்கர ஹிட் அடித்தன. பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ உள்ளிட்ட படங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றன. இதனால் அவரது மார்கெட், படங்களால் நிரம்பி வழிய ஆரம்பித்தன. இதனால் தெலுங்கில் தற்போது சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் டொவினோ தாமஸுடன் நடித்து வருகிறார்.
டாப் நடிகையாக இருக்க காரணம் என்ன?
நடிகை த்ரிஷா, 20 வருடங்களாக டாப் நடிகையாக இருப்பது எப்படி என்று பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு காரணம், அவர் தனது அழகையும் உடலையும் ஃபிட்டாக பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்காக அவர், தனியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான் அழகும் இளமையும் குறையாமல் இருக்கிறது.
மேலும் படிக்க | விஜய், விஷால் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - இயக்குனர் ஹரி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ