Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?

Kavin Lady Get Up: பிரபல நடிகர் கவின், தனது இன்ஸ்டா பக்கத்தில் பெண் வேடமிட்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 20, 2024, 09:00 PM IST
  • பெண் வேடமிட்ட கவின்
  • புதி பட பாடல் ரிலீஸ்
  • எந்த படம் தெரியுமா?
Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?  title=

Kavin Lady Get Up: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர், நடிகர் கவின். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹிட் நாயகனான கவின்..

தமிழ் சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், கவின். சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்திருந்த ‘வேட்டையன்’ கதாப்பாத்திரம் இவருக்கு பெரிய பெயரை தேடி தந்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், இன்னும் பெரிய உயரத்தை அடைய விரும்பினார். அதற்காக இவர் தேர்ந்தெடுத்த மேடைதான், பிக்பாஸ். இந்தநிகழ்ச்சியின் மூன்றாது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த இவர், தனது நக்கலான பாடல்கள் மூலமாகவும், சிரிப்பான பேச்சு மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்தார். 

பிக்பாஸ் மேடை இவருக்கு சினிமாவில் பெரிய கதாப்பாத்திரங்களுக்கான கதவை திறந்து வைத்தது. ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அடுத்து 2021ஆம் ஆண்டு வெளியான ‘லிஃப்ட்’ படத்திலும் நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து வெளியான ‘டாடா’ திரைப்படம் பலதரப்பு ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்று கொடுத்தது. இதையடுத்து, தற்போது கவின் ஹிட் நாயகன் என்ற பெயரை பெற்றிருக்கிறார். 

பெண் வேடமிட்ட கவின்..

நடிகர் கவின், இதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகை ஷெரின் போல வேடமிட்டு நடித்திருக்கிறார். அப்போது அவரை திரையில் பார்த்த ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இப்போது தனது படம் ஒன்றிற்காகவும் அவர் பெண் வேடமிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?

பாடல் ரிலீஸ்

கவின், தற்போது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தற்பாேது பாேஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. இந்த நிலையில், இதன் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்காகத்தான் கவின் பெண் வேடம் போட்டிருக்கிறார். 

‘மெலோடி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடல், தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பெண் வேடமிட்டு ஆடும் கவினையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

ரிலீஸ் எப்போது?

கவினின் ஸ்டார் திரைப்படம், வரும் மே மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, அவர் அனிருத் இசையமைக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

யுவனை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி..

சமீபத்தில் ‘கோட்’ படத்தின் விசில் பாேடு பாடல் வெளியானது. இதில் பீட் சரியில்லை என்று கூறி யுவன் சங்கர் ராஜாவை பலர் ட்ரோல் செய்தனர். இதையடுத்து, இவர் சமூக வலைதளத்தை ஷட் டவுன் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மெலடி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இது, யுவன் சங்கர் ராஜாவை ட்ராேல் செய்வர்களுக்கு நல்ல பதிலடியாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | Guess Who: சிறு வயதில் செம க்யூட்டாக பிரபல திரை நட்சத்திரங்கள்! யாரென்று தெரிகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News