விரைவில் GOAT அப்டேட்! வெங்கட் பிரபு கொடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!
Venkat Prabhu Press Release: வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண பெண் குறித்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.
பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெங்கட் பிரபுவிற்கு அவரது சகோதரர் பிரேம்ஜிக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்தது. அவ்வப்போது பிரேம்ஜிக்கு திருமணம் என்று செய்திகள் உலா வரும். ஆனால் அதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பிரேம்ஜிக்கு திருமணம் என்று பத்திரிகை ஒன்று வெளியானது. பிறகு அது உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த பத்திரிகையில் வரும் ஜூன் 9ம் தேதி திருத்தணி அருள்மிகு முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள போகும் யார் என்று பலரும் தேடி வந்தனர். மேலும் அவர் பத்திரிக்கை துறையை சார்ந்தவர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜி திருமணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..
வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், " இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9 ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்! இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் விரைவில்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் GOAT படம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருந்த GOAT படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் விஜய் மற்றும் படக்குழு CG சம்பந்தமான வேலைகளுக்காக சென்றது. தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ