Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குழந்தை பிறந்தது! ஆணா பெண்ணா?

Sivakarthikeyan Third Baby : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Jun 3, 2024, 06:15 PM IST
  • சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை
  • ஆர்த்தி கர்ப்பமாக இருந்த புகைப்படங்கள் வைரல்
  • என்ன குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா?
Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குழந்தை பிறந்தது! ஆணா பெண்ணா? title=

Sivakarthikeyan Third Baby : பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருக்கிறார்.  

ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மூன்றாவது கர்ப்பமாக இருந்த ஆர்த்தி:

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது போல தெரிந்தது. இதை பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோவை இணையதளம் முழுவதும் பரவ விட்டனர். ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டிருந்த சமயத்தில், அவரே தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருக்கிறார். 

இரண்டு குழந்தைகள்:

சிவகார்த்திகேயன், திரையுலகிற்கு வருவதற்கு முன்பே தனது முறைப்பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றாலும், இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக இருக்கும் தம்பதி என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதையடுத்து, இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு ஆராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை வைத்து அவர் கனா படத்தில் பாடலும் பாட வைத்தார். இதையடுத்து, 2021ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குகன் தாஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில்தான், தற்போது இவர்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. இதையடுத்து, சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், அவரது நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடித்த அயலான் திரைப்படம் வெளியானது. இப்படம், பெரிதளவில் நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் நல்ல வசூலை பெற்றது. கமல்ஹாசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அமரன் எனும் படத்தில் நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிரார். புல்வாமா தாக்குதல் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அவர் மேஜர் முகுந்த் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அடுத்து, அவர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News