Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..

Latest News Madurai Muthu Divorce : சின்னத்திரை உலகில் பிரபலமான நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து. இவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 5, 2024, 09:48 AM IST
  • மதுரை முத்துவின் முதல் மனைவி உயிரிழந்தார்
  • இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்
  • அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்!
Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி.. title=

Latest News Madurai Muthu Divorce : தமிழ் ரசிகர்கள், திரை பிரபலங்களுக்கு மட்டுமல்ல சின்னத்திரையில் உள்ள காமெடி கலைஞர்களுக்கும் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களின் வேலைகளையும பாராட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட, பிரபலமான காமெடி கலைஞர்களுள் ஒருவர், மதுரை முத்து.

மொக்க ஜோக் மதுரை முத்து:

தமிழ் மேடை கலைஞர்களுள் திறமையான மற்றும் பிரபலமானவர் மதுரை முத்து. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து மேடை ஏறியதாலேயே இவர் பெயருக்கு முன்னர் ‘மதுரை’என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. இவரை, பலர் கலக்க்ப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாகவும், அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாகவும் பார்த்திருக்கிறொம். தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஞாயிறு கலாட்டா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். 

குக் வித் கோமாளியில்..

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக இருப்பது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இரண்டாவது சீசனில் குக்காக பங்கு பெற்றவர் மதுரை முத்து. சரியாக சமைக்க வராவிட்டாலும் ஆங்காங்கே கடி ஜோக் கூறி அனைவரையும் கவர்ந்து வந்தார். இதனாலேயே இவர் போட்டியை விட்டு வெளியேறிய பிறகும், இவரை சிறப்பு விருந்தினராக வாராவாரம் அழைத்தனர். இந்த சீசனில் அனைத்து எபிசோடுகளிலும் இதனாலேயே அவர் பங்கு பெற்றிருந்தார். 

முதல் மனைவி மறைவு: 

மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கடந்த 2016ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கும் மதுரை முத்துவிற்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இரண்டாவது திருமணம்: 

மனைவி உயிரிழந்த பிறகு, சில மாதங்களுக்கு பின் அவரது தோழியும் பல் மருத்துவருமான நீத்து என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. இவர்கள் அவ்வப்போது யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. 

மேலும் படிக்க | ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!

விவாகரத்தா? 

மதுரை முத்துவின் மனைவி நீத்து அண்மையில் தனது instagram பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனக்கு என்று ஒரு உயிர் வேண்டும் என்றும் அது தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார். இப்படி எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் தான் ஏமாந்து போவதாகவும் அவர் கூறியிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் ஒரு வேலை மதுரை முத்துவும் அவரது மனைவியும் ஒன்றாக இல்லையோ என்று சந்தேகத்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்றும் யோசித்து வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டிய மதுரை முத்து தனது குடும்பத்தினருடன் அவ்வீட்டில் குடியேறிய போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Priyanka Deshpande : பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணமா!? மாப்பிள்ளை இவர்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News