கனடாவில் பிறந்தவர் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சன்னிலியோன். இவர் ஆபாச படங்களில் நடித்து உலக புகழ்பெற்றவர். ஆனால் அதனைத் தொடராத அவர் அதிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழிலும் தலை காட்ட ஆரம்பித்தார். அப்படி அவர் ஜெய் நடிப்பில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அவர் லீட் ரோலில் நடித்திருக்கிறார். ராணியாக நடித்திருக்கும் சன்னி லியோனுடன் ஜிபி முத்துவும் நடித்துள்ளார். படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ரவி மரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.



இந்தச் சூழலில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சன்னி லியோனும், ஜிபி முத்துவும் கலந்துகொண்டனர்.  இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிபி முத்து சன்னி லியோன் குறித்து கலகலப்பாக பேசினார். மேடையில் பேசிய அவர், ''ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதான் என்னுடைய முதல் படம்.


மேலும் படிக்க | ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா?


இயக்குநரிடம் நடிக்க பயமா இருக்குனு சொன்னேன். கவலைபடாதீங்க. சொல்ற படி நடிங்கனு இயக்குநர் சொன்னார். சன்னி லியோன்னு சொன்னாங்க.. அவங்க யாருனு அப்போது எனக்கு தெரியாது. நிறைய கமெண்ட்லாம் வரும். ஆனாலும் எனக்கு தெரியாது. இதுதான் சன்னிலியோன்னு சொல்லி சில படத்தையெல்லாம் காமிச்சான். அதாவது புகைப்படத்த காமிச்சாங்க''என்றார்.


மேலும் படிக்க | நித்தம் ஒரு வானம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!


மேலும் படிக்க | யுவன் சங்கர் ராஜா உடன் Travel Mode-ல் பிரியங்கா; யாருக்கா இருக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ