யுவன் சங்கர் ராஜா உடன் Travel Mode-ல் பிரியங்கா; யாருக்கா இருக்கும்?

Priyanka Deshpande Video: தனது காரில் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடிக்கொண்டே டிராவல் செய்யும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 2, 2022, 11:06 AM IST
  • காரில் யுவன் சங்கர் ராஜா உடன் பிரியங்கா
  • பிரியங்கா வீடியோ வைரல்
  • லைக்ஸை குவிக்கும் வீடியோ
யுவன் சங்கர் ராஜா உடன் Travel Mode-ல் பிரியங்கா; யாருக்கா இருக்கும்? title=

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் மற்றும் டிடி-க்குப் பிறகு பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் இவர்கள் இருவரும் அல்லது இவர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் இருப்பார்கள். அந்தளவுக்கு காமெடி, கலாட்டா மூலம் மக்களை வசியப்படுத்தி வைத்துள்ளனர். இதில் பிரியங்கா விஜய் டிவியில் எந்த தொகுப்பாளரும் செய்யாத ஒரு விஷயத்தை முதன்முறையாக முயற்சி செய்தார். அதாவது, பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக களம் புகுந்தார்.

ரியோ சென்றிருந்தாலும், அவர் பிக்பாஸூக்கு பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் முழு நேர தொகுப்பாளராக வந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்காவின் என்ட்ரி, பெரியளவில் பேசப்பட்டது. நிகழ்ச்சிக்கும் கூடுதல் லைம் லைட்டைக் கொடுத்தது. அவருடைய நடவடிக்கைகள் தினம்தோறும் விமர்சனத்துக்குள்ளானது வேறு கதையாக இருந்தாலும், பிரியாங்கா பிக்பாஸில் இருக்கும் வரை அந்த நிகழ்ச்சிக்கு பக்கா டிஆர்பி ரேட்டிங்கை கொடுத்துக் கொண்டிருந்தார். 

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

ஒருகட்டத்தில் அவருடைய பெயர் பெரியளவில் டேமேஜ் ஆகிறது. டிரோல் மெட்டீரியலாக இருக்கிறார் என்பதை உணர்ந்த பின்னரே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிறிது காலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் காண்பதில் இருந்து தள்ளியிருந்த பிரியங்கா, மீண்டும் பழைய பிரியங்காவாக என்டிரி கொடுத்தார். அப்போது முதல் இன்று வரை தான் சந்தித்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கி, தொகுப்பாளினி வரிசையில் உச்சாணிக் கொம்பிலேயே உட்கார்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்துள்ளார். அதில், அவர் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டே காரில் பயணம் செய்வது போல் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. மேலும் இந்த பாடல் யாரை நினைத்து பிளே செய்திருக்கிறீர்கள் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் தற்போது தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  அத்துடன் ஊம் சொல்றியா ஊஹும் சொல்றீயா வித்தியாசமான கேம் ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் விரைவில் மற்றொரு ரியாலிட்டி ஷோவையும் பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமீர் - பாவனி இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News