ஒரு சில பாலிவுட் படங்கள் மற்றும் சர்வதேச இசை வீடியோக்களை செய்த ஊர்வசி ரவுடல், ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.  மிஸ் திவா 2015 மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போன்ற பட்டங்களை வென்ற ஊர்வசி ரவுடல் சமீபத்தில் நடைபெற்ற  'தி லெஜண்ட்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தனக்கு தமிழ் படங்கள் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்றும் தான் தமிழ் சினிமாவில் நடிக்க என்ன காரணம் என்பதும் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்


தமிழ் சினிமாவின் மீதுள்ள விருப்பம் குறித்து அவர் பேசுகையில், நான் தமிழ் சினிமாவில் பணிபுரிய விரும்பியதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது.  நான் ரஜினிகாந்த் சாரை விரும்புகிறேன், சிஎஸ்கே-வை விரும்புகிறேன், தோனியை விரும்புகிறேன் அதோடு எனது ஹீரோ சரவணன் சாரையும் விரும்புகிறேன் என்று கூறினார்.  மேலும் பேசியவர் இது எனக்கு பெருமையாக உள்ளது, இப்படி ஒரு அறிய வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் ஜே.டி-ஜெர்ரி அவர்களுக்கு நன்றி, என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.



இவர் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார், அடுத்ததாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார்.  இவர் 'தி லெஜெண்ட்' படம் மட்டுமல்லாது, பார்பரா பயலோவாஸ் இயக்கத்தில் மைக்கேல் மோரோன் நடிப்பில் வெளியான '365 டேஸ்' என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.  மேலும் பாலிவுட்டில் 'இன்ஸ்பெக்டர் அவினாஷ்' என்கிற தொடரில் நடித்திருந்தார்.  அதோடு தமிழில் வெளியான திருட்டுப்பயலே-2 படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்திருந்தார்.


மேலும் படிக்க | கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR