பீஸ்ட் பார்ட் 2 தான் ஜெயிலரா? லோகேஷ் பாணியில் நெல்சன்?
`ஜெயிலர்` படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருக்கும் கத்தியும், `பீஸ்ட்` படத்தில் விஜய் வாயில் இருக்கும் கத்தியும் ஒரே மாதிரியாக உள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'விக்ரம்' திரைப்படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளதாக பலரும் கொண்டாடி வருகின்றனர். 'கைதி' படத்தில் வரும் கதாபாத்திரங்களை 'விக்ரம்' படத்தில் இயக்குனர் லோகேஷ் இணைத்திருக்கும் விதம் தான் பல தரப்பிலிருந்தும் அதிகம் பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற பெயரை வைத்தது ரசிகர்கள் தான் என்றும், இனி வரும் படங்களில் அதையே தான் தொடரப் போவதாகவும் இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் விஜய்யின் 'தளபதி 67' படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்-ன் ஒரு பகுதியாக இருக்குமா என்பது தெரியவில்லை, ஆனால் 'விக்ரம் 3' மற்றும் 'கைதி 2' கண்டிப்பாக கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஃபகத் பாசில், ஜார்ஜ் மரியன், தீனா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜாபர் சாதிக் மற்றும் நரேன் போன்ற நடிகர்களை ஒன்றிணைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தொடங்கவுள்ள 'ஜெயிலர்' படமும் லோகேஷ் படங்களை போன்று இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் நெல்சனின் முந்தைய 'டாக்டர்' படத்தில் இருந்த மஹாலி மற்றும் கில்லி கதாபாத்திரங்கள் , விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்திலும் இடம்பெற்று இருந்தது. இதனால் இந்த கதாபாத்திரங்கள் நெல்சனின் புதிய படத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருக்கும் ரத்தக்கறை படிந்த கத்தியும், 'பீஸ்ட்' படத்தில் விஜய் வாயில் இருக்கும் கத்தியும் ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் நெல்சன், லோகேஷ் பாணியை பின்பற்றி இருக்கிறாரா என்பது 'ஜெயிலர்' படம் வெளியான பின்பு தான் தெரியும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR