பெரிதாக அறிமுகமில்லாத வெங்கடேஷ் அப்பாத்துரை நடிப்பில் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள படம் கதிர்.  மொத்தமாக இந்த படத்தில் தெரிந்த முகமாக இருப்பது சார்பேட்டா பரம்பரை மற்றும் குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சந்தோஷ் பிரதாப் மட்டுமே.  மேலும் மலையாளத்தில் பிரபலமான ரஜினி சாண்டி மற்றும் கதாநாயகியாக பவ்யா கதிர் படத்தில் நடித்துள்ளனர்.  இன்று காத்துகாவிக்குல ரெண்டு காதல் மற்றும் ஹாஸ்டல் படம் வெளியாக உள்ள நிலையில் நாளை இந்த படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!


இன்ஜினியரிங் படித்துவிட்டு ஊரில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ வெங்கடேஷ் சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். ஆங்கிலத்தில் தடுமாறும் இவர் வேலை கிடைக்காமல், தண்ணியடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். பின்பு இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் ஆக வரும் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்துகிறார். பின்பு ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அடுத்து அவர் என்ன செய்தார்? என்பதே கதிர் படத்தின் ஒன்லைன்.  தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் சாதாரண கதையை ஒரு நல்ல பீல் குட் மூவியாக தர முயற்சித்துள்ளனர் கதிர் படக்குழுவினர்.


தற்போது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றித்திரியும் பல இளைஞர்கள் ஹீரோ கதாபாத்திரத்துடன் தங்களை ஒன்றிக் கொள்ளலாம்.  அந்த அளவிற்கு அவர் செய்யும் செயல்கள் அவ்வளவு எதார்த்தமாக உள்ளது.  ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.  குறிப்பாக காலேஜில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளுமே ரசிக்கும்படியாக உள்ளது, பல இடங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.  ஹீரோ வெங்கடேஷ்க்கு அடுத்து படத்தை தாங்கி பிடிப்பவர் ரஜினி சாண்டி தான்.  தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறார்.  நம்மளுக்கு இப்படி ஒரு ஹவுஸ் ஓனர் இல்லையே என்ற ஏக்கம் வரும் அளவிற்க்கு நடித்து இருக்கிறார் ரஜினி.  கதாநாயகியாக வரும் பாவ்ய ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.



இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வந்தாலும் படம் முடிந்தும் சந்தோஷ் பிரதாப் நினைவில் நிற்கிறார்.  அப்படி ஒரு பவர்புல்லான பெர்பாமன்ஸை அந்த கதாபாத்திரத்தில் கொடுத்துள்ளார்.  அந்த 20 நிமிடங்களை மட்டுமே தனியாக ஒரு படமாக எடுக்கலாம்.  விவசாயிகளுக்கு நல்லது செய்கிறேன் என்று படம் எடுத்து மக்களை பாடாய் படுத்தும் இயக்குனர்களுக்கு மத்தியில், அதே விவசாயத்தை வைத்து புதுவிதமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் பழனிவேல்.  குறிப்பாக ஆட் பிலிம் எடுக்கும் காட்சிகள் பிரமாதம்.  பெரிய நடிகர்கள் இல்லாதது மட்டுமே கதிர் படத்தின் பெரிய மைனஸ்.  ஜாலியாக ஒரு பீல் குட் மூவி பார்ப்பதற்கு கதிர் ஒரு நல்ல படம்.


மேலும் படிக்க | அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கரின் லூட்டி! ஹாஸ்டல் திரைவிமர்சனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR