Latest News Dhanush Son Yatra 12th Mark : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 6) வெளியானது. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில், 94.56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷின் மகனும் இத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷ்-ஐஸ்வர்யாவின் மகன்கள்..


தமிழ் திரையுலகில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கலைக்குடும்பம் என்பதால், ஆரம்பத்திலேயே சினிமா ஆர்வத்துடன் கோலிவுட்டிற்குள் நுழைந்தவரை அன்பு கரங்கள் கொண்டு அரவணைத்துக்கொண்டது, திரைத்துறை. காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு, தனுஷின் மார்கெட் எகிற, அப்படியே அவரை காதலும் தொத்திக்கொண்டது. 2004ஆம் ஆண்டு, இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். 


இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற, இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு ‘யாத்ரா’ என்ற மகனும், 2010ஆம் ஆண்டு ‘லிங்கா’ என்ற மகனும் பிறந்தனர். நடிகர் தனுஷ், தன் பட விழாக்களுக்கு, இசையமைப்பாளர்களின் கான்சர்ட் நிகழ்ச்சிகளுக்கு என பல இடங்களுக்கு தனது மகன்களுடன் சென்று வந்தார். இந்த நிலையில்தான், தனுஷும் ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக 2022ஆம் ஆண்டு தெரிவித்தனர். 18 ஆண்டு திருமண உறவில், திடீரென விரிசல் விழ இவர்கள் இருவரும் பிரிய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. சில வாரங்களுக்கு முன்பு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரினர். இந்த விவகாரம் தமிழ் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. 


மேலும் படிக்க | முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய தனுஷ்-வெட்கப்பட்ட ஐஸ்வர்யா! வைரல் வீடியோ..


பிள்ளைகள் வளர்ப்பு..


தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து இருந்தாலும் தங்களது இரு பிள்ளைகளையும் Co-Parenting முறையில் வளர்த்து வருகின்றனர். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஐஸ்வர்யாவுடன் அவரது மகன்கள் வந்த புகைப்படமும், கேப்டன் மில்லர் படவிழாவிற்கு தனது தந்தையுடன் அவர்கள் வந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகின. தற்போது தனுஷ்-ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவிற்கு 18 வயதும், இளைய மகன் லிங்காவிற்கு 14 வயதும் ஆகிறது. இருவருமே சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. யாத்ரா, 12ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் அதில் அவர் எடுத்த மார்க் எவ்வளவு என்பது குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. 


யாத்ரா எடுத்த மார்க்..


யாத்ரா, நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு மொத்தம் 569 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மொழி பாடத்தில் 100க்கு 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தேர்வில் 99 மதிப்பெண்களும் இயற்பியலில் 91, பயாலஜியில் 97 மற்றும் வேதியலில் 92 மதிப்பெண்களும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


இது இணையத்தில் வைரலாகும் தகவலே தவிர, அவர் உண்மையில் அரசின் பொதுக்கல்வி திட்டத்தில் படித்தாரா என்பதும், அவரது மார்க் இதுதானா என்பதும் தெரியவில்லை. வருடா வருடம், தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, இது போல நடிகர்-நடிகைகளின் பிள்ளைகள் எடுத்துள்ள மதிப்பெண்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் பரவுவது புதிதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவுக்கு ‘இவர்’தான் காரணமா! ரசிகர்கள் அதிர்ச்சி..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ