தங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

Aishwarya Rajinikanth Dhanush Divorce : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க கோடி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2024, 02:46 PM IST
  • 2022ஆம் ஆண்டில் தனுஷ்-ஐஸ்வர்யா தங்களது பிரிவை அறிவித்தனர்
  • இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது
  • திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி மனு
தங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு! title=

Aishwarya Rajinikanth Dhanush Divorce : இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும் இயக்குனர் செல்வராகவனின் சகோதரருமான நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இவருடைய திருமண வாழ்க்கையில் தற்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணாமாக கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் சமூக வளைதளத்தில் இருவரும்  தங்கள் பிரிந்துள்ளதாக பதிவிட்டனர்.

“திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்!”

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையினான பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சமாதான முயற்சியை ஈடுபட்ட போதும் இருவரும் விவாகரத்து என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2004 ஆண்டு தங்களுக்கு நடைபெற்ற திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஜினிக்கு ஜாேடியாகும் 54 வயது பிரபல நடிகை! இது சூப்பர் Pair ஆச்சே- தலைவர் 171 அப்டேட்..

காதல் டூ திருமணம்:

தனுஷும் ஐஸ்வர்யாவும், தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளுள் ஒருவராக இருந்தனர். காரணம், இருவருமே பலர் கனவு காணும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 2003ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் செலிபிரிட்டி ஷோவில், ஐஸ்வர்யாவும் தனுஷும் சந்தித்து கொண்டனர். பின்னர் போன் கால் மூலம் காதலை வளர்த்தனர். விஷயம் வீட்டு பெரியவர்களுக்கு தெரிய, அவர்கள் இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது ஐஸ்வர்யாவிற்கு வயது, 23. தனுஷிற்கு வயது 21. இருவரும் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், 18 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தற்போது பள்ளியில் படித்து வரும் நிலையில், பிரிவிற்கு பிறகு பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பை ஐஸ்வர்யா-தனுஷ் இருவருமே சரிவர பார்த்து வருகின்றனர். இவர்கள் 2022ஆம் ஆண்டு தங்களின் பிரிவை அறிவித்த போது அதிர்ந்து போன ரசிகர்கள், “இன்னும் விவாகரத்து வாங்கவில்லையே, எப்படியாவது மீண்டும் சேர்ந்து விடுவர்” என்று நினைத்தனர். ஆனால், தற்போது இவர்களின் உறவிற்கு அதிகாரப்பூர்வமான முடிவு வந்துவிட்டது. 

தனுஷை வைத்து படம் இயக்கிய ஐஸ்வர்யா..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷை வைத்து 3 படம் எடுத்திருக்கிறார். இந்த படம், சூப்பர் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் அன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அதே போல, அவர் இயக்கிய ‘வை ராஜா வை’ படத்திலும் தனுஷ் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் தனுஷ், இளையராஜாவின் பயோபிக், தான் இயக்கும் படத்தின் ரிலீஸ் என பிசியாக இருக்க, ஐஸ்வர்யாவும் தனது ஃபிட்னஸ் மற்றும் திரையுலக பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். 

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்:

தனுஷ்-ஐஸ்வர்யாவின் முடிவிற்கு, சமூக வலைதள போராளிகள் பலர் அவர்கள் இஷ்டத்திற்கு கருத்துகளை ஆங்காங்கே தெளித்து வருகின்றனர். ஒரு நெட்டிசன் “அப்போ உங்களுக்கு ஊர் கூடி திருமணம் செய்து வைத்ததெல்லாம் பொய்யா, பெரியவங்க என்ன இளிச்சவாயா..” என்று கேட்க, இன்னொருவர் “இப்போதுதான் விவாகரத்தே வாங்குகிறீர்களா, எப்போதோ வாங்கியிருப்பீர்கள் என நினைத்தேன்” என நக்கலடித்துள்ளார். யார் என்ன பேசினாலும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களுக்கு பதிலளிக்காமல் தங்களது வேலையை பார்த்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘நீயா நானா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான இளைஞர் மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News