Latest News Thalapathy 69 : தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் ஹீரோவாக இருந்த நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இதையடுத்து, அவர் கடைசியாக நடிக்க இருக்கும் படம்தான் தளபதி 69. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 69 திரைப்படம்:


நடிகர் விஜய், தற்போது GOAT (Greatest Of All Time) படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை அடுத்து, நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்கிறார்.


தளபதி 69 படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பம் வெகு நாட்களாக நிலவி வந்தது. கார்த்திக் சுப்புராஜா? வெற்றிமாறனா? ஹெச்.வினோத்தா? என்று குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது இதனை இயக்குவது ஹெச்.வினோத்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


நாயகி யார்?


தளபதி 69 படத்தின் கதை எழுதும் மற்றும் நடிகர்களை தேர்வு செய்யும் வேலைகள் கடந்த சில மாதங்களாக சைலண்டாக நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், விஜய்யுடன் ஜோடியாக நடிக்க த்ரிஷா, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில், தற்போது சமந்தாதான் இதில் நடிக்க ஒப்புக்காெண்டிருப்பதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 


விஜய்-சமந்தா சேர்ந்து நடித்த படங்கள்..


நடிகர் விஜய்யும் சமந்தாவும் இதற்கு முன்னரே சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். முதலில் அவர்கள் இணைந்து நடித்த படம், கத்தி. இந்த படத்திற்கு பிறகு அட்லீ விஜய்யை வைத்து இயக்கிய தெறி மற்றும் மெர்சல் படத்திலும் இவர்கள் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகளா?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?



விஜய் திரையுலகை விட்டு விலகுவது ஏன்?


நடிகர் விஜய்க்கு, கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்கும் எண்ணம் இருந்தது என்பது, அவர் பட விழாவில் பேசும் பேச்சை கேட்பவர்களுக்கு அப்பட்டாக தெரிந்திருக்கும். போதாக்குறைக்கு, தனது அனைத்து படங்களிலும் அரசியல் டைலாக்குகளை வைத்து, தனக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பதை வெட்ட வெளிச்சத்தில் காட்டி வந்தார். இறுதியில், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம்தான் ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இதற்கு சில நாட்கள் கழித்து, தன் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் செயலியையும் அறிமுகப்படுத்தினார்.


கட்சியை அறிவிக்கும் போதே, தான் தற்போது கமிட்டாகி இருக்கும் படங்களில் மட்டும் நடித்துக்கொடுத்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். இதைப்பார்த்த சிலர், மறைந்த முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் வழியில் விஜய்யும் செல்வதாக விமர்சித்தனர். எது எப்படியிருப்பினும், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யால் பெரிய மாற்றம் வரும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 


நடிகராக மட்டும் இருந்த போது சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எதுவும் பேசாமல் இருந்த இவர், தற்போது அனைத்திற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ