Meiyazhagan Salary For Actor Karthi And Arvind Swamy : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான படம், மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தி-அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்தியின் சம்பளம்:


நடிகர் கார்த்தி, தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருகிறார். பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த இவரது பயணம், இப்போது மெய்யழகன் வரை தொடர்ந்திருக்கிறது. இவர் பல நல்ல படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்களில் ஒரு சில மட்டுமே ஹிட் ஆகியிருக்கின்றன. மெய்யழகன் படத்தில் இவர் பாசமான கிராமத்து ஆளாக நடித்திருக்கிறார். நடிகர் கார்த்தி, ஒரு படத்திற்கு ரூ.15 முதல் 30 கோடி வரை சம்பளம்  வாங்குவதாக கூறப்படுகிறது. மெய்யழகன் படத்திற்காக அவர் சுமார் 16 கோடி சம்பளமாக வாங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


அரவிந்த் சாமியின் சம்பளம்:


நடிகர் அரவிந்த் சாமி, திரைக்கு வந்த புதிதில் பிசியான நடிகராக வலம் வந்தார். அப்போது மிகவும் பிசியாக வலம் வந்த இவர், லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்தார். இடையில் பெரும் விபத்து மற்றும் முதுகுத்தண்டில் அடி, அறுவை சிகிச்சை, படுத்த படுக்கையான 5 ஆண்டு வாழ்க்கை என்ற பல இன்னல்களை கடந்து வந்த இவர், பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, மெய்யழகன் படத்தில், முக்கிய கேரக்டராக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 



காரத்தி மற்றும் அரவிந்த் சாமியின் சம்பள விவரங்கள் குறித்தவை, சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்கள்தானே தவிர, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. 


மெய்யழகன் திரைப்படம்:


96 படத்தை இயக்கி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த இயக்குநர், பிரேம் குமார். திரைப்பட ஒளிப்பதிவாளரான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் படங்களை இயக்க ஆரம்பித்தார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் இயக்கிய படம்தான், மெய்யழகன். இந்த படம் தெலுங்கில் சத்யம் சுந்தரம் எனும் பெயரில் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..


சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான இந்த படம், கார்த்தியின் 27வது படமாகும். பல நாட்களுக்கு பிறகு, ஃபீல் குட் படத்தில் கார்த்தி நடிப்பதால், மெய்யழகன் படத்தின் மீது பலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. கார்த்தியுடன் சேர்ந்து, அரவிந்த் சாமியும் முக்கிய பாத்திரமாக நடித்திருந்தார். 90களில் பிரபல நாயகனாக இருந்த இவர், தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு கம்-பேக் கொடுத்தார். இந்த நிலையில் அவர் மெய்யழகன் படத்திலும் சிறப்பாக நடித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 


கார்த்தியின் அடுத்த படம்..


நடிகர் கார்த்தி, மெய்யழகன் படத்திற்கு பிறகு வா வாத்தியார் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து, 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்கும் நடைபெற இருக்கிறது. இதில், சந்திர போஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் கார்த்தி நடிக்க இருக்கிறார். 


மேலும் படிக்க | Meiyazhagan Review : மெய்யழகன் படம் எப்படி? சுமாரா? சூப்பரா? திரை விமர்சனம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ