அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..

Arvind Samy With His Son And Daughter Viral Photos : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் அரவிந்த் ஸ்வாமிக்கு, ஒரு மகன்-ஒரு மகள் உள்ளனர். அவர்களின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கலாமா?

Arvind Samy With His Son And Daughter Viral Photos : ஒரு காலத்தில், தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ஃபேவரட் ஆன கதாநாயகனாக இருந்தார், அரவிந்த் சாமி. ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ரொமாண்டிக் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்த இவர், பின்னர் கம்-பேக் கொடுத்து இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன்-மகளை பார்த்துள்ளீர்களா?

1 /8

கோலிவுட் உலகை, 90களில் கலக்கி வந்த நாயகன், அரவிந்த் ஸ்வாமி. பம்பாய், தளபதி, ரோஜா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பெரும்பாலான மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார். 

2 /8

திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்த இவர், பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கினார். அந்த தொழிலும், பல நூறு கோடி லாபம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. 

3 /8

2005ஆம் ஆண்டு, அரவிந்த் சாமிக்கு ஒரு விபத்து நேர்ந்தது. இதில், அவர் முதுகுத்தண்டு அடிப்பட்டதால் 4-5 ஆண்டுகள் தனது காலை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். பின்னர், அதிலிருந்து மீண்டு வந்தார். 

4 /8

அரவிந்த் சாமிக்கு கம்-பேக் ஆக அமைந்த படம், தனி ஒருவன். இந்த படத்தில் ‘சித்தார்த் அபிமன்யூ’ எனும் கதாப்பாத்திரத்தில் முதன் முதலாக வில்லனாக நடித்தார். இந்த ரோல் அப்படியே பொருந்தி போக, தொடர்ந்து ஜெயம் ரவியுடன் போகன் படத்திலும் வில்லனாக நடித்தார். 

5 /8

அரவிந்த் சாமிக்கு ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. 

6 /8

அரவிந்த் சாமியின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம், மெய்யழகன். இதில் அவர், அருள் மொழி வர்மன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் 

7 /8

அரவிந்த் சாமிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். மகள் பெயர், ஆதிரா. இவர், சமையல் கலை பட்டப்படிப்பு படித்து இப்போது செஃப் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. 

8 /8

அரவிந்த் சாமிக்கு 24 வயது நிரம்பிய மகனும் இருக்கிறார். இவர், சண்டை பயிற்சி கற்று தேர்ந்தவர். தந்தையை போலவே, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பொருந்தியவர். அரவிந்த் சாமியின் பிள்ளைகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Next Gallery