மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?
GV Prakash Kumar Saindhavi : சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற சைந்தவியும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
GV Prakash Kumar Saindhavi : கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர், வரிசையாக விவாகரத்து பெற்று வருகின்றனர். தனுஷ் ஐஸ்வர்யா, பாலா-முத்து மலர் உள்ளிட்ட பலர் விவாகரத்து பெற்றுக் கொண்டதை தொடர்ந்து சமீபத்தில் இசை உள்ளகை சேர்ந்த ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகியோர் தங்களது விவாகரத்து குறித்து அறிவிப்பினை வெளியிட்டு இருந்தனர்.
காதல் முதல் விவாகரத்து வரை…
ஜிவி பிரகாஷும் சைந்தவியும் தங்களது டீன் ஏஜ் காலத்தில் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் அல்ல. இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர். பள்ளி பருவ காலத்தில் இருந்தே காதலித்து வந்த இவர்கள், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளும் பார்ட்னர்கள் ஆகவும் இருந்தனர். இவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். பிற திரை உலக பிரபலங்கள் போல பெரிதாக நேர்காணல்களிலோ, வீடியோக்களிலோ தங்களது காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து இருவரும் பேசியதில்லை. இருப்பினும் இவர்களின் காதல் பலருக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவ்னி என பெயர் வைத்தனர்.
கல்யாணத்திற்கு பிறகு தான் ஜி வி பிரகாஷ் குமார் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இருப்பினும் எந்த சர்ச்சையிலும் சிக்காத பிரபலங்களுள் ஒருவராக இருந்தார். அதை அனைத்தையும் இவரது விவாகரத்து குறித்த அறிவிப்பு தகர்த்து விட்டது. சில மாதங்களுக்கு முன்பு சைந்தவியும் ஜிவி பிரகாஷும் தாங்கள் பரஸ்பர விவாகரத்து பெறப்போவதாக அறிவிப்பினை வெளியிட்டனர். இதை அடுத்து, இந்த விவாகரத்திற்கு காரணம் ஜிவி பிரகாஷ் தான் எனவும் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவதூறு கிளம்ப ஆரம்பித்தது. இதை எடுத்து சைந்தவி அப்படி ஒன்றும் இல்லை என்று பதிலடி கொடுத்தார்.
மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு
மீண்டும் இணைகின்றனர்…
ஜீவி பிரகாஷும் சைந்தவியும் தங்களது திருமணத்திற்கு முன்பும் அதன் பிறகும் பல்வேறு படங்களில் இணைந்து பாடல்கள் பாடியிருக்கின்றனர். குறிப்பாக இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய், விழிகளில் ஒரு வானவில், யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது உள்ளிட்ட பட பாடல்களை பாடி இருக்கின்றனர். அந்த வகையில் விவாகரத்திற்கு பிறகு ஒரு படத்தில் இணைந்து பாடல் பாடி இருக்கின்றனர். வெற்றிமாறனின் தயாரிப்பில் விமல் நடித்திருக்கும் படத்தில் தான் இந்த பாடலிடம் பெற்றிருக்கிறது. இந்த பாடல் பதிவு விவாகரத்திற்குப் பிறகு நடந்ததா அல்லது அதற்கு முன்னரே நடந்ததா என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் இருவரின் பெயர்களை பாடல் போஸ்டரில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுற்று இருக்கின்றனர்.
இப்போது என்ன செய்கிறார் ஜி.வி?
ஜி.வி.பிரகாஷ், தற்பாேது தமிழ் சினிமாவின் பிசியான இசைமயமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சூர்யா 43, வனங்கான், வீர தீர சூரன், மாஸ்க், கிங்ஸ்டன் உள்ளிட்ட பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளன.
மேலும் படிக்க | சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ