)
GV Prakash Kumar Saindhavi Divorce : தமிழ் திரையுலகில் இசை உலகின் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி. 2013 ஆம் ஆண்டு திருமணம் முடித்த இவர்களுக்கு, அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் இவர்களுக்கு விவாகரத்து ஆக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
காதல் திருமணம் செய்த ஜோடி!
ஜிவி பிரகாஷ், ஏ ஆர் ரகுமானின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும். சிறுவயதிலிருந்தே இசை உலகில் சாதித்து வரும் இவர் ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சைந்தவியும் சிறுவயதிலிருந்தே இசைஞானம் பெற்ற திறமைமிகு பாடகியாக இருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள், ஒரு கட்டத்தில் காதல் ரிலேஷன்ஷிப்பை தொடர, அது பத்தாண்டுகளுக்கு முன்னர் திருமண உறவிலும் முடிந்தது. ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடிக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்த குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்தது. தற்போது அதற்கு நான்கு வயது ஆகிறது.
விவாகரத்து சர்ச்சை!
தமிழ் திரையுலகை சேர்ந்த காதல் ஜோடிகள் சமீப காலமாக தங்கள் விவாகரத்து அறிவிப்பினால் ரசிகர்களுக்கு மினி ஹார்ட் அட்டாக்கையே கொடுத்து வருகின்றனர். சமந்தா நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் சைந்தவி திருமணம் முடித்து பத்து வருடங்கள் மேல் ஆகின்றன. 2023 ஆம் ஆண்டு திருமண நாளின் போது தன் கணவருக்கு திருமண நாள் விஷ் செய்து instagramல் பதிவிட்ட சைந்தவி, இந்த வருடம் அப்படி எந்த பதிவையும் வெளியிடவில்லை. ஸ்டோரி கூட போடவில்லை. இதிலிருந்தே ரசிகர்களுக்கு இவர்கள் விவாகரத்து பெற உள்ளனரா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது.
இந்த நிலையில் தான் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஒன்றாக இல்லை என்றும் பிரிந்து வாழ்வதாகவும் கூட சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் அதிர்ச்சி:
ஜிவி பிரகாஷ் சைந்தவி இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் பல காதல் பாடல்களை பாடி இருக்கின்றனர். குறிப்பாக, என் ஜீவன், யாரோ இவன், என்னாச்சு ஏதாச்சு, யார் இந்த சாலை ஓரம் போன்ற பல ஹிட் பாடல்களை தங்கள் குரலில் பாடி இருக்கின்றனர். பாட்டிலேயே இவர்கள் கெமிஸ்ட்ரி இந்த அளவிற்கு இருக்க இயல்பு வாழ்க்கையிலும் இதைவிட அதிகமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த விவாகரத்து குறித்த சர்ச்சை வெளியானது அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இசையமைப்பாளராக மட்டும் இருந்த ஜி வி பிரகாஷ், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹீரோ ஆக வேண்டும் என்று முடிவு செய்து, தற்போது தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். வணங்கான், சூர்யாவின் 43 வது படம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், அமரன், உள்ளிட்ட படங்கள் இவர் இசையில் வெளிவர இருக்கின்றன.
சைந்தவியும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செல்வது, பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடுவது என பிசியாக இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ